பக்கம்:புதையலும் பேழையும்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 புதையலும்

முதல் உலகத் தமிழ் மாநாடு நிகழவிருந்தது. அதிற் பார்வை யாளனாகக் கலந்துகொள்ளும் ஆர்வமும் பயணத்தை உந்தியது.

அந்நாட் காலையில் நாகைப் பெருமக்கள் சிறப்போடு வழியனுப்பப் படகேறிச் சென்று மாநிலச் சென்னை' (State of Madras) என்னும் கலத்துள் புகுந்தேன். அதிற்பணியாற்றும் நண்பர்களும் எனது பழைய மாணவச் செல்வர்களும் வாயிற் புழையில் நின்று மாலையிட்டு வரவேற்று அன்பைப் பெய்தனர்.

- எனதுயிரனைய மாணவச் செல்வம் திரு சு. அசனல்ஆரிபு உள்ளம் பொங்கும் அன்புடன் கலத்தில் தங்கும் அறை முதலிய வாய்ப்புகளை நலஞ்சூழ ஏற்பாடு செய்திருந்தார். உடன் பயணங்கொண்டு மகிழ்வித்தார்.

மாலை 6 மணியில் கலம் புறப்பட இருந்தது. ஒளி ஒளிந்துகொள்ளத் துவங்கி, இருள் பையப் பையப் படர்ந்தது. எனது எளிய அவா முந்தியது. நாகைக் கடற்கரையில் மஞ்சள் மணிக்கோவை போன்று ஒளிவிளக்குகள் தோன்றின. கரையின் தென்பகுதியில் மதுரைக் கப்பல் நிறுவன'க் கட்டடம் உயர்ந்த மாடங் கொண்டது. அதன் முகப்பில் 25 அடி உயரமுள்ள நெடுந்துாண்கள் நான்கு நான்காய் இரு வரிசைகளில் நிவந்து நின்றன. எனவே, அது 'நெடுங்கால் மாடம். அதில் ஏற்றப் பட்டு எரிந்து கொண்டிருந்த ஒளி விளக்குகளை நோக்கிக் கலத் தில் நின்ற புலவன் யான் சுடர்களை எண்ணி மகிழ்ந்தேன்.

உருத்திரங் கண்ணனாரது பட்டினப்பாலை அடிகள் இரண்டையும் பகுத்து பகுத்துப் பார்த்தேன். 'நெடுங்கான் மாடம்'... ஆகா! இதோ நெடுந்துரண்களைக் கொண்ட மாடம். 'ஒள்ளெரி நோக்கி’... இங்கும் ஒளிவிடும் விளக்கத்தை நோக்கு கின்றேன். 'கொடுந்திமில் பரதவர்'... யான் பெருங்கலத்தில் புலவன்; 'குரூஉச் சுடர் எண்ணும்'... மஞ்சள் நிறச் சுடர்களை எண்ணினேன். சொல்லுக்குச் சொல் இயைந்து நிற்கும் சங்க இலக்கியம் காலங்கடக்கினும் காட்சி கடக்காமல் நிற்பதை உணர்ந் தேன். கலம் புறப்பட்டு ஒளி விளக்குகள் மின்மினியாகும் வரை உவந்து கண்டு நின்ற யான் அண்டையில் நின்ற ஆரிபுச் செல்வரிடம், -