பக்கம்:புதையலும் பேழையும்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 புதையலும்

காலின் அடி சற்றுப் பரவியதாகக் கடல் நீரில் பா விற்று. இந்நிலையில் ஒர் ஆலமரம் அடி பரவி வெண்மைத் தழைகளுடன் மேலே தழைத்து நிற்பது போன்றிருந்தது.

உடன் வெண்ணிறக் கால் முழுதும் பருத்து விரி வடைந்தது.

விரிந்த காலின் உள்ளே துளை பெறுவது போன்று விரைந்து மையத்தில் இடைவெளி ஏற்பட்டது.

அவ்விடைவெளி வழியே முதலில் புகையோட்டம் ஏறு வது போன்று நீர் ஏறுவது தெரிந்தது.

தொடர்ந்து புகையோட்ட நீர் செறிந்து நீரலை ஏறுவதாக ஆயிற்று. இந்நிகழ்ச்சி ஒரிரு இமைப்பிற்குள் நேர்ந்தது.

இக்காட்சி துாண்போன்ற ஆடிக் குழாய்க்குள் நீர் அலையலையாக ஏறினால் எவ்வாறிருக்குமோ அவ்வாறு இருந்தது.

மூன்று நான்கு மணித்துளி அளவில் இந்த உரிஞ்சல் நிகழ்ந்தது. ஆலமரத்தின் வெண்மைநிறம் சாம்பல் நிற மாகியது.

அடுத்துக் கடற்பரப்பில் பரவியிருந்த கால் அடி, துண் அளவில் ஒடுங்கியது. முன்னர் தூணினது அடிப்புறம் இறங்கிய நிலையில் மீண்டும் விழுதின் அடி போன்று உயர்ந்து மேலே சென்றது. அவ்விழுது மேலே குறைவது தெரியா அளவில் ஏறியது.

விழுது ஏற ஏற வெண்முகிலில் கருநிறமும் ஏறுகிக்கொண்டே இருந்தது.

விழுது ஆவின் பால்மடிக் காம்பாகி அஃதும் குறைந்து காரின் அடிமட்டமாயிற்று.

கருங்கார் நல்ல திரட்சியாக உயரே எழுந்தது; பின் நகரத் தொடங்கியது.