பக்கம்:புதையலும் பேழையும்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 புதையலும்

என்னும் பகுதி காலூன்றிய முகில் நீரைக் கொள்ளாமல் மீளாது: கொண்டே மீளும் என்னும் உறுதிக் கருத்தை வழங்குகின்றது. இக்கருத்துடன் நீரைக் கொண்டு முதிர்வதனாலே கொள்-மூ' கொண்மூ' எனப்பெயர் பெற்றது என்பதையும் குறிப்பாக அறிகின்றோம்.

சேக்கிழாரும் குளத்தில் மலர்ந்த மலர்களை மேய இறங்கிய எருமைக்கு உவமையாக, -

'மருமேவு மலர் மேய,

மாகடலின் உட்படியும் உருமேகம் எனமண்டி'

எனப் பாடினார்.

உவமையாகக் கூறப்படுவது யாவரும் பரவலாக அறிந் துள்ள - கண்டுள்ள தெரிபொருளாகும். இங்கு உவமையாகக் கூறப்பட்ட முகில் நீரைப் பருகும்’ நிகழ்ச்சி பண்டைக் காலத் தில் யாவராலும் காணப்பட்ட தெரி பொருளாகவே நிகழ்ந் திருக்கின்றது. இன்றோ, நாம் உவமிக்க்ப்பட்ட பொருளைக் (உபமேயத்தை) கொண்டு உவமையைத் தெரிந்து கொள்ள வேண்டிய தெரியா - அறியாப் பொருளாகி விட்டது.

காரானை.

மேலும் பெருஞ்சித்திரனார் பரிசிலர்பெறும் பரிசாகக்குறித்த மருப்புள்ள யானை' எனும் சொல் காரானை' என்னும் சொல் விளக்கத்திற்கு முடுக்கி விடுகின்றது.

பெரியவர் காரானை தண்ணி குடிக்குது’ என்று முகிலைத் தான் 'காரானை' எனக் குறித்தார். காரானை’ என்றால் 'கருமைநிற யானை' என்னும் பொருள் முதலில் எழும். முகிலின் திரட்சி, யானை உருவம் போன்று தோன்றும். முகில் கால் இறக்குவது யானைக்கு மருப்பு முளைத்தது போன்று தோன்றும். கால் கடலில் படிவது யானையின் தும்பிக்கை நீரில் படிந்திருக் கும் காட்சியாகும். காலிறக்கிய தூணில் உண்டான உள்துளை யும் தும்பிக்கையின் தும்பித்துளையாகும். அத்துளையில் நீர் ஏறுவது, யானை தும்பிக்கையால் நீர் உரிஞ்சுவதாகும் (வெண்) முகில் (கருங்) கார் ஆவது கருநிற யானையாகும்.

1 பெ. பு: திருளாவு : 8,