பக்கம்:புதையலும் பேழையும்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 335

இயல்பான மொழி என்பது உணரப்படும். எனவே, தமிழ் இனிமைத் தமிழ், தண்மைத் தமிழ் இயல்பு மொழி. - -

தமிழ் தெய்வ மொழி.

கழாரம்பர் என்னும் தொல்லாசிரியர் தமிழின் தனிப் பொருளைக் கூற எழுந்தவர், . -

'தமிழ் சிவம் இனிமை எனும்

தனிப்பொருளாம்” - . - என்று தம் 'பேரிசை” நூற்பாவில் குறித்தார். அவர் கருத் தில் இனிமைத் தமிழுக்கு முன்னர், சிவத்தமிழ் - தெய்வத்தமிழ்இறைத் தமிழ் எழுகின்றது. தமிழே இறைவனாய், இறைவனே தமிழாகின்றான். தமிழ்ச் சான்றோர் தமிழுக்குத் தந்த இயல்பான தகுதி இறை. இறைவனேயாகும் தகுதி உடையது தமிழ். தமிழும் தெய்வ மொழியே. வடமொழிதான் தேவபாடை என்ப தன்று. தென் மொழியும் தெய்வத் தமிழே.

இதனைச் சேக்கிழார் சொல்லிக் காட்டுகின்றார்.

"ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத் தமிழ்" சேக்கிழாரது இந்த உண்மைப் பேச்சில் தமிழ், தெய்வத் தமிழ் மட்டுமன்று மேன்மைத் தமிழ்; மேன்மைத் தெய்வத் தமிழ். உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையாது உலகத்தை அளந்து நிற்கும் தமிழ், ஞாலம் அளந்த தகவால் தமிழ் மன்பதை மொழி. மன்பதை மொழியே தெய்வ மொழியாகும் தகுதி உடையது.

சுந்தரரும், -

'பண்ணார் இன்றமிழாய் பரமாய பரஞ்சுடர்' என்று பரமனைப் பாட்டுத் தமிழ் ஆனவன் என்கின்றார்.

தமிழ் அருள்மொழி

இத்தெய்வத் தமிழால் போற்றியே சமய குரவர் நால்வரும் இறையடியார் பலரும் வியத்தகு அருட்செயல்களை இறைவன் அருளால் செய்தனர்; பெற்றனர்-என நூல்களில் காண்கின்றோம்

1 சுந், தே திருமழபாடி 2.