பக்கம்:புதையலும் பேழையும்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 புதையலும்

அருச்சனை தமிழ்ப்பாட்டே.

இவற்றையெல்லாம் உள்ளத்துக் கொண்டே சேக்கிழார்,

'அருச்சனை பாட்டேயாகும். என்றார். அதனையும் தாம் கூறுவதாக அன்றி இறைவனே சுந்தரமூர்த்தியிடம் ஏவலிடுவதாக,

'அருச்சனை பாட்டே யாகும்

ஆதலால் மண்மேல் நம்மைச்

சொற்றமிழ் பாடுக என்றார்.

து மறை பாடும் வாயார்' -

a - -என்று பாடினார். தூமறை

பாடும் வாயை உடையவரையே தமிழ்ப் பாட்டே அருச்சனை யாகும்’ என்று பேச வைத்துள்ளார் சேக்கிழார். இதில் சேக்கிழாரின் உள்ளெண்ணம் புலனாகின்றது. இறைவன், 'சொற்றமிழ் பாடுக” என்று சுந்தரரைப் பணித் தான். ஒருவரைத் தமிழ் பாடுவதற்குப் பணித்தவன் மற்றொருவரைத் தமிழ் மந்திரம் பாடுவதற்காகப் படைத்தானாம். அவ்வாறு படைக்கப்பட்டவர் திருமூலர். அவரே பேசுகின்றார்:

"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே’’’

தன்னை நன்றாகத் தமிழால் போற்றவேண்டும் என்பது இறைவனது பேரவா. அதனால் நன்றாக வே படைத் துள்ளானாம். இறைவனே பெரும் புகழ் விரும்பிதான். அந்தப் புகழையும் தமிழால் கேட்பதில் பெருவிருப்பினன். அப்பெருவிருப்பில் இறைவன் தன்னைத் தானே தமிழில் பாடிக்கொண்டவன். வைணவப் பெரியார் நம்மாழ்வாரைக் கருவியாகக் கொண்டு பாடிக் கொண்டான். இதனை நம்மாழ்வாரே

"அன்றைக்கன்று என்னைத்தன் னாக்கியென் - னால்தன்னை

இன்றமிழ் பாடிய ஈசன்' -

1 பெரி பு: தடுத்தாட்கொண்ட 100

2 திருமந் : 81 8 திருவாய் : 7 9 : 1.