பக்கம்:புதையலும் பேழையும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் o

பெரியம்மா, சின்னம்மா-என அடைமொழியுடன் பெரிய,

சிறிய தாயாரை அழைக்கின்றனர். கண்ணம்மா-எனப் பெயர்ச்சொல்லின் பின்னே அமைத்துப்

பெண்டிர்ை அழைக்கின்றனர். இவ்வாறு பல முனைகளில் விளிப்பொருளில் அமையினும், முதலில் குறிக்கப்பட்ட குழந்தையின் குரல்தான் சொல்லின் மூலப் பொருளுக்கும், முதற் பொருளுக்கும் இயைபாவது. பிறவெல்லாம் பரந்துபட்ட வழக்கால் விரிந்தன. இவ்விரிவில் 'அம்மா அழைப் புப் பொருளோடு பெயர்ப் பொருளையும் கொண்டது.

  • ரன் அம்மா சமைத்தது'

'உன் அம்மாவைக் கூப்பிடு -என உரையாடல்களில் "அம்மா விளிச்சொல்லாக அன்றி அம்மாவையே குறிக்கும் பெயர்ச் சொல்லாக அமைவதைக் காண்கின்ருேம்,

'அம்மா' வைக் குறிக்கும் பெயர்ச்சொற்கள் பல:

'அவ்வை அம்மனை பயந்தாள்

அம்மையே யாயே அன்னை அவ்வம் இல் ஆயி மோய்தாய்

ஈன்றவள் நாமம் ஒன்பான்' -எனச் சூடாமணி நிகண்டு ஒன்பது பெயர்களைக் குறிக்கின்றது. இப்பட்டியலில் அமையாத ஞாய் என்னும் சொல்,

'யாயும் ஞாயும் யாரா கியரோ” "கைம்மிக ஞாயையும் அஞ்சுதி யாயின்'3 -rன இலக்கியங்களில் 'உன் தாய்' என்னும் பொருளில் அமைத்

துள்ளது. மேலும் மரூஉ மொழியாகவும், திரிபுச் சொற்களாகவும் சில சொற்கள் உள. -

1 சூடா. நி : மக்கள்:பா, 16 : அடி 1, 2. 2 குறுந்தொகை : பா : 40 : அடி 1 3 கலித்தொகை : பா : 107 : அடி 25, .