பக்கம்:புதையலும் பேழையும்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 245

என்னும் சொற்கள் மிகக் கடுமையானவை என்றாலும் வேண்டும் இவர்களுக்கு’ என்று சொல்லச் சிலருக்காகிலும் தோன்றும்.

இந்த ஏச்சையும் மீறிய வன்செயலாக நக்கீரர் நடந்து கொண்ட கதையும் வழங்கப்படுகின்றது. "ஆரியம் நன்று; தமிழ் தீது என்று கூறிய குயக்கொண்டான் என்பவனை எதிர்த்துச் சாகடித்துவிடவும் நக்கீரர் எழுந்தாராம். இது வேண்டாத ஒன்றானாலும் அப்படி ஒர் உணர்வு முற்காலத்திலேயே நக்கீரருக் கோ மற்று எவருக்கோ எழுந்தது நினைக்கத் தக்கதே.

இவற்றிற்கெல்லாம் பின்னரும் இறைவனை அண்ட இயலாமல் தமிழ் தள்ளித் தடுக்கப்பட்டிருப்பதை உணர்ந்தும் உணராதவர்போல் சிவனே" என்றிருக்கும் தமிழர்களைப் பார்த்தார், பாவேந்தர் பாரதிதாசனார்: -

"உயிர்போன்ற உங்கள் தமிழ்

கடவுளுக்கே உவப்பாதல் இல்லை போலும்; உயிர்போன்ற உங்கள் தமிழ்

உரைத்தக்கால் கடவுளதை ஒப்பார்

போலும்' - -என்று தமிழ் உணர்வைக் கெல்லப் பார்த்தார். அசையாத தமிழர்களை எண்ணி நொந்து தமிழையே பார்த்துத் தமிழன்னாய்!

தொடுத்துமகிழ் நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலைத் தோன்றாவண்ணம்

தடுத்துவரல் நினைக்கையிலே நெஞ்சுபதைக்கும் சொல்ல வாய் பதைக்கும்” . . . . . . . - -என்று பதைத்து நின்றார். அவர் அத்துடன் நிற்பவர் அல்லர்: நின்றவரும் அல்லர். -

1 தமிழியக்கம் : கோயில்: 1. 2 தமிழியக்கம் : தமிழ்: 2.