பக்கம்:புதையலும் பேழையும்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 புதையலும்

'சொற்கோவின் நற்பொற்றித்

திருஅகவல் செந்தமிழில் இருக்கும் போது கற்கோயில் உட்புறத்தில்

கால்வைத்த தெவ்வாறு சகத்திர நாமம்?" என்று விடைகாண முடிந்த வினாவை எழுப்பினார்.

தமிழ் மந்திரம் எது?

தமிழின் பேரிலக்கண நூல் தொல்காப்பியம், மறையையும்

மந்திரத்தையும் பின்வருமாறு விளக்குகின்றது:

'நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப”

இந்நூற்பா குறையற்ற நெஞ்சோடு நிறைமொழிகளை வழங்கும் சான்றோர் தம் ஆணையாகக் கிளந்தவை யாவும் மறைமொழிகள் எனப்படும்; அவைதாம் மந்திரம் என்று முந்தைச் சான்றோர். கூறினர்' என்று விளக்குகின்றது. எனவே, சான்றோர் ஆணைச் சொற்களே மறை என்றாகின்றது. தமிழ்ச் சான்றோரது இறை பற்றிய ஆணை மொழிகள் யாவும் மறைகளே. மேலும், இந் நூற்பாவில் உள்ள என்ப’ என்னும் சொல் கொண்டு இக்கருத்து தொல்காப்பியத்திற்குப் பல்லாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சான்றோர்களது கருத்து என்பதும் பெறப்படுகின்றது. தமிழ்ச் சான்றோர் யாவரும் நிறைமொழியினரே. அவர்கள் வலியுறுத்திக் கூறும் யாவும் மறைகளே. அம்மறைகளே மந்திரங்கள் என்பதை

“மறைமொழி தானே மந்திரம் என்ப" என்னும் அடி யில் உள்ள தானே' என்னும் சொல் உறுதிப் படுத்துகின்றது. இங்குக் குறிக்கப்படும் மந்திரம் தமிழ் மந்திரமே. இதற்கு உரை எழுதிய பேராசிரியர் என்னும் உரையாசிரியர்,

"தானே என்று பிரித்தார், இவை

தமிழ் மந்திரம் என்றற்கு” -என்றார். எனவே, தமிழ்ப்பெருஞ் சான்றோர்களது நூல்களாம் தமிழ் மறைகளி லிருந்து இறைவன் புகழ் தோய்ந்த பெயர்த்தொடர்களைத்

1 தமிழியக்கம் : கோயில்: 5 2 தொல். பொருள் : 480