பக்கம்:புதையலும் பேழையும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 - . பேழையும்

வேர்ச்சொல் என்று குறித்த இயைபிலேயே கிளை என்னும் சொல்லை அமைத்துப் பொருட்கிளை எனக் குறிக்கலாம். மொழியால் தோன்றும் சுவை, நயம், பயன் முதலியன மொழியியலின் வளப்பகுதியாகும்.

சொல்லின் பொருட்கிளையினைச் சான்றோடு விளக்கும் கருத்திலேயே "தலையில் முளைத்த தலைகள் என்னும் தொடர் அமைக்கப்பட்டுள்ளது. திருக்குறளைக் களமாகக் கொண்டு இதனைக் காணலாம்.

திருக்குறள் தலைகள்.

திருவள்ளுவப் பெருந்தகை தலை என்னும் முதல் தலை சொல்லைத் தனியாகவும், புணர்மொழியில் வைத்தும் ஆண்டுள்ளார். திருக்குறளில் 43 இடங்களில் இச்சொல் வருகின்றது. இவ்வெண்ணிக்கையில் கருத்து ஒன்றும் இல்லை. இச்சொல் திருக்குறளில் முறையே வரிசையாகத் தொடர்ந்து அமைந்து ஆங்காங்கு நுணுக்கமாகப் பொருட்கிளைவிட்டுப் பல்குதலே வியந்து நோக்கத்தக்கது; நயந்து மகிழ்தற்குரியது.

'கோளில் பொறியின் குணமிலவே, எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை” (குறள் : 9) - இக்குறளில்தான் தலை’ என்னும் சொல்க முதன்முதலில் காண்கின்றோம். இங்கே குறளின் கருத்துகள் பற்றிய ஆராய்ச்சியின்று, அக்கருத்தினை அறிவிக்கும் பாங்கில் அம்ை ந் துள்ள மொழியியல் கருத்தே இங்கு உய்த்துக் காணப்படுகின்றது.

இக்குறளில் தலை: என்னும் சொல் மாந்த உறுப்பாகிய தலையைக் குறிப்பது. அஃதாவது தலை: என்னும் சொல் தன் நேர் ப்ொருளை வெளிப்படையாகத் தந்து நிற்கின்றது.

சொல் தரும் வெளிப்படையான பொருள் என்ற நிலை யோடு மட்டும் தலை’ என்னும் சொத் இக்குறளில் அமைய வில்லை. தலை என்னும் உறுப்பின் அமைப்பு, அவ்வமைப்பின்