பக்கம்:புதையலும் பேழையும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 基爵

புடைய மாந்தன் என்னும் பொருளைக் குறிப்பாய் உணர்த்தியது இஃதே ஆகுபெயர்.

இவ்வாகு பெயரைப் போன்றே, அதனினும் நுணுக்கமாக, ஆனால் விரிந்த பாங்கோடு - குறிப்பாகப் பொருளை உணர்த்தும் சொல் நிலை யும் உண்டு. இஃது ஒரளவாய் ஆகுபெயரோடு தொடர்புடையதாயினும் தனித்தும் நோக்கத்தக்க தகுதியுடையது.

பொருட் கிளை

ஆகுபெயர் தனக்குரிய நேர்பொருளை உணர்த்தாமல் அப்பொருளினின்றும் நீங்காமல் ஒதுங்கி நின்று, ஒர் இயைபோடு வேறொரு பொருளைக் குறிப்பால் உணர்த்தும். சொல் நிலை’ என்று குறிக்கப்பட்டதோ ஒரு சொல் தனக்குரிய நேர்பொருளை முதலில் வெளிப்படையாக உணர்த்தும். உணர்த்தி, அப் பொருளின் மையத் தன்மையிலிருந்து நீங்காமல் நின்று, குறிப் பால் வேறு பொருளை உணர்த்தும். வேறு ஒரு பொருளைக் குறிப்பதோடு நில்லாமல் மேலும் தொடர்ந்து - தன் மையப் பொருளில் நீங்காது - பொருள்கள் முளைத்துக் கிளைத்துப் பெருக இடந்தந்து நிற்கும். இந் நிலையைச் சொல்லின் பொருட் கிளை' எனலாம். ஆகுபெயர் இலக்கணத் துறையது; இப் பொருட் கிளை மொழியியல் துறையது.

வளமான மரம் போன்றது மொழியியல் துறை. மரம் பல பகுதிகளைக் கொண்டது. மரத்தின் மூலப்பகுதி மண்ணுக் குள்ளிருந்து உணவு கூட்டி, உரம் சேர்க்கும் வேர்ப்பகுதி. அடி மரம் உடற்பகுதி. கிளை, கோம்பு, கோடு முதலியன சினைப் பகுதி. தளிர், இலை, மலர், காய் கனி முதலியன பயன் நல்கும் வளப்பகுதி,

மொழிக்கு அடிநிலையான அசைகளும், சொற்களும் மொழி யின் மூலப்பகுதியாம். இதனை மரத்தின் மூலப்பகுதியான வேர்' என்னும் சொல்லைக் கொண்டே 'வேர்ச்சொல்' என்கின்றோம். இலக்கிய இலக்கணங்கள் மொழியியலின் உடற்பகுதி. ஒரு சொல்லிலிருந்து பொருள்கள் முளைத்துக் கிளைத்துப் பெருகுதல் மருத்தினது சினைப்பகுதி போன்றது. இதுகொண்டு இம்மொழி யியல் பகுதியைச் சொல்லின் பொருட்கிளை” எனக் குறிப்பதில் இயைபிருக்கின்றது. வேர் என்ற சொல்லை அமைத்து