பக்கம்:புதையலும் பேழையும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளஞ்சேரன் புதையலும் பேழையும் என்ற நூல் மூலம் நமக்கு அளிக்கிறார். அவர் புலவர் மட்டு மன்றி, கவிஞரும் ஆவார். எனவே, புலமையும் சுவை யும் பொருந்திவந்திருக்கின்றன விருப்பு வெறுப்பற்று உண்மை தேடுவது ஆய்வுப்பணி. உணர்வும் கற்பனை யும் உயர்ந்து நிற்பது கவிதையுலகம். இவ்விரண்டின் மரபுகளையும் காத்து நிற்கும் புலவர் கோவை. இளஞ்சேரன் இருவேறுலகினை இணைக்கும் பணியை எளிதாகவும் இயல்பாகவும் செய்திருக் கிறார். பாராட்டப்படவேண்டிய படைப்பு.

சொல், பொருள் இரண்டையுமே தொட்டு இக் கட்டுரைத் தொகுப்பின் ஆய்வு ஊடுருவுகிறது. சொல்லாய்வைச் சுருக்கமாக மூன்று தலைப்புகளில் முடித்துக் கொண்டு, இயல்பாகவே சுவை மிகுந்த பொருளாய்வில் சற்று விரிவாக ஈடுபடுகிறார் ஆசிரியர். சொல்லாய்வின் மூன்று கட்டுரைகளும் பொன் னான ைவ. பொருண்மை மிக்கவை. அன்னையைக் குறிக்கும் அம்மா’ என்ற சொல், சிறு மாற்றங்களுடன், பல மொழிகட்கும் பொது என்றே கூறலாம். - - -

அதன் இயல்பு நிலையை 'அ' என்ற ஒலியின் பிறப்பையும், 'ம்' என்ற ஒலியின் பிறப்பையும், அகர நீட்டமும் மகர மெய்யும் கலந்த 'மா' ஒலியையும் விளக்குவதன் மூலம் நிலைநாட்டும் பாங்கு வியக்கத் தக்கது. தமிழின் ஒலியமைப்பு, சொற் படைப்பு ஆகியவற்றின் அருமை பெருமை பற்றிப் பலவிதமாகப் புலவர்கள் விதந்து எழுதியும் பேசியும் வருகின்றனர். அவற்றைப் படிக்கும்