பக்கம்:புதையலும் பேழையும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது அறிவியல் பார்வை கொண்ட பலருக்கு இக்கருத்துகள் மொழிப்பற்றாலும், முன்கூட்டியே மனத்தில் உறுதிப்படுத்திக் கொண்ட முடிவுகளை நிலைநிறுத்தும் விருப்பாலும் எழுந்தவையோ என்ற ஐயம் எழுகிறது. 'அம்மா போன்ற கட்டுரையுள் காணும் செறிவும் தெளிவும் அதனை ஒரு சிறந்த ஆய்வு கட்டுரையாக்குகிறது. அடுத்து வரும் கட்டுரை களான சொல்லும் நெல்லும், தலையில் முளைத்த தலைகள் ஆகியன சொல்லும் பொருளும் இணைந்த கட்டுரைகள். சொல்வதை ஆசிரியர் சுவை குன்றாது சொல்கிறார். அவரது இலக்கியப் பயிற்சியின் ஏற்றம் ஒளிவிடுகின்றது.

தமிழ் இலக்கியம் ஒரு களஞ்சியம். அதைத் தன் னுள் கொண்ட பேழையைத் திறப்போர் முத்தும் மணியும் காண்பர். வரலாற்று விரிவும் காண்பர். இருந்தாலும் பொதுவாக இலக்கியப் புலவர்கள் தமிழ் இலக்கியம்பற்றிப் பேசும் பொழுது சொல் நயம், காட்சி வண்ணனை, கற்பனை வளம், உவமை நயம்-இவற்றை விட்டால் அறநெறிக் கருத்துகள் என்ற பகுதியிலேயே உள்ளத்தைப் பறிகொடுத்தவர் களாய் இருந்துவந்தனர். தமிழ் இலக்கிய ஏடுகளே பண்டைத்தமிழரது அறிவியல், பொறியியல், சமுதாய வாழ்வு ஆகியவற்றையும் அறியத் துணை நிற்கும் சான்றுகள் என்ற பரிமாணம் அவ்வளவாக உணரப் படவில்லை; உறுதிப்படுத்தப்படவில்லை. பேழையில் காணும் ஒன்பது கட்டுரைகளும் சமுதாயம், அறிவியல், பொறியியல், வரலாறு பற்றிய ஆய்வுக்கு உதவும்சான்றுகள் நிறைந்தகளஞ்சியமாய் இலக்கியம் அமைந்திருப்பதற்கு எடுத்துக்காட்டுகளாக உள்ளன.