உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதையல்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதையல் 1 199 இப் இழுக்கும் வேலை கிடைத்தது. அந்த வேலையிலிருந்து நான் நடிகனாகவே ஆகும் ஒரு சந்தர்ப்பமும் வாய்த்தது. 'ஔவைப் பிராட்டி' நாடகம் நடக்கிறது எங்கள் கம்பெனியில்! போதெல்லாம் தெருக் கூத்துகளாக இல்லாமல், ஒரு ஊரில் போய் ஒரு மாதம் தங்கி தொடர்ந்து நாடகங்கள் நடத்துகிற அளவுக்கு எங்கள் கம்பெனி வளர்ந்திருந்தது. ஊரின் மத் தியிலே கொட்டகைப் பந்தல் போட்டு கட்டண்ம் வைத்து வசூல் செய்து நாடகங்கள் நடத்தினோம். அப்படி நடக்கும் போது தான் ஒரு நாள் நடிகனானேன். ஔவையார் நாடகம்; முதல் நாலைந்து காட்சிகள் முடிந்து விட்டன. ஒளவையை ஏமாற்றுகிற முருகன், மாட்டுக்காரப் பையனாக நாவப் பழ மரத்தில் உட்கார்ந்திருக்கும் காட்சி உண்டல்லவா? அதில் மாட்டுக்காரனாக நடிக்கிறவன் ஏதோ தவறு செய்தான் என்று, மேக் அப் அறையில் முதலாளியிடம் அடி வாங் கினான். அழுதுகொண்டே நின்றான். பிறகு, நாவப் பழ சீன் வந்தது. ஒளவையாரும் மேடைக்கு வந்து விட்டாள், பாடிக்கொண்டே! மரத்தை அண்ணாந்து பார்த்தால், அங்கே யிருக்கவேண்டிய பையனைக் காணோம். நாட க வந்தேன். மேலேயிருந்தபடியே என்ன செய்வாள் ஔவை? திகைத்தாள். இதைப் பார்த்த நான் உடனே ஒரு முடிவுக்கு மேடை உட்புறமாகவே பரணில் ஏறி, மேடையில் உள்ள மரத்தில் இறங்கி, மாட்டுக்காரப் பைய னைப் போல் உட்கார்ந்து கொண்டேன். நான் சாதாரண மாக உடுத்தியிருந்த கந்தல் ஆடை அதற்கு மிகவும் உதவி செய்தது. இந்த விஷயம் முதலாளிக்குத் தெரிந்தது. மறு நாள் முதல் நானே மாட்டுக்காரப் பையனாக வேடம் தரித் தேன். மாட்டுக்காரனிலிருந்து மார்க்கண்டேயர் வரையிலே மள மளவென்று பெரிய வேடங்கள் கிடைத்தன, எனக்கு! துருவன் வேடம் என்னைப் போல யாரும் செய்ததில்லை என்று அப்போது ஊரிலே பெயர்! பிரகலாதா நாடகத் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதையல்.pdf/201&oldid=1719466" இலிருந்து மீள்விக்கப்பட்டது