200 மு. கருணாநிதி தில், நரசிம்மாவதாரம் தூணைப் பிளந்துகொண்டு இரணி யனைக் கொன்று குடலைக் கிழித்து மாலை போட்டுக் கொள் ளும்போது ஒரு விருத்தம் பாடுவேன்; கொட்டகையே அதிரும் கைதட்டல்! மார்க்கண்டேயன் வேஷம் போட்ட போதுதான் ஒரு சமயம் என் உயிருக்கும், சிவன் உயி ருக்கும் ஆபத்து வந்து விட்டது. அதாவது; எமன் மார்க்கண்டேயனாகிய என்னைத் துரத்துகிறான். - நான் ஓடிப் போய் சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொள்கி றேன். எமன் பாசக் கயிற்றை வீசுகிறான். உடனே சிலை வெடித்து சிவபெருமான் புறப்பட்டு எமனைக் குத்துவது போல ஈட்டியோடு பாயவேண்டும் இது காட்சி! - - நான் எமன், என்னை வழக்கம் போலத் துரத்தினான். ஓடிப் போய் சிவலிங்கத்தைப் பிடித்துக் கொண்டேன். எமன் பாசக் கயிறு வீசுவதற்குள் சிவலிங்கம் வெடித்து சிவன் புறப்பட்டு விட்டார். தாமதமாக வீசப்பட்ட பாசக் கயிறு, என் மீது விழுவதற்குப் பதிலாக, சிவனின் கழுத் திலே விழுந்து; அவர் கழுத்து இறுகி விட்டது. கழுத்து இறுகியதால், சிவன் எமன் மீது வீச வேண்டிய ஈட்டியை என் மார்பின் மீது ஓங்கி வீசினா 'மார்க்கண்டேயன்' மயக்கமுற்று விழுந்து விட்டேன். சிவனும் உருண்டு விட்டார். எங்கள் இருவருக்கும் 'எமன்' உதவி செய்ய வேண்டியதாயிற்று. எமன் வேடதாரி நல்ல நாட்டு வைத் தியருங்கூட. அவருடைய சிகிச்சைக்குப் பிறகு உடல் நலம் பெற்றேன் நான். நல்லதங்காள் நாடகத்திலும் நான்தான் மூத்த பிள்ளை. கிணற்றங் கரையிலே நின் று கொண்டு நான் பாடும் பாட்டுக்கு - "ஒன்ஸ்மோர்" விழாத நாளே கிடையாது. நல்லதங்காள் வேஷம்கூட நான் - போட்டிருக்கிறேன். நல்லதங்காள் நாடகத்தில் எங்கள் கம்பெனியில் நிறைய வேடிக்கைகள் நடந்திருக்கின்றன. ஒருநாள் நான் நல்லதங்கை வேஷம் போட்டேன். வாழைத்
பக்கம்:புதையல்.pdf/202
Appearance