உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதையல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதையல் 25 உதவியாக நிலவு, மேகத்திலிருந்து விடுபட்டது. வழுக் கைத் தலையும், வளர்ந்த தாடியும் கொண்ட அந்த வயோ திக மனிதர்; மேட்டில் நின்றபடி ஆகாயத்தை நோக்கி கையை உயர்த்தினார். அந்த தளர்ந்த மேனிப் பெரியவர் தன் அதிரும் கரத்தை ஆகாயம் நோக்கி நீட்டிய காட்சி- அதுவும் அந்த இரவில்-ஏதோ ஒரு புனிதத்தன்மை படிந்த காட்சியாகவே திகழ்ந்தது. துரையும் நின்றனர். பரிமளமும் வைத்த கண் வாங்காமல் “யார் அத்தான் அது?” “வயதான ஒரு மனிதர் !” "மனிதர் தானா? அல்லது பூவரசு இலைப் பாம்பு போலத்தானா?" 66 ' இரு! கவனிப்போம்-” பெரியவர் ஆகாயத்திலிருந்த பார்வையைத் திருப்பா மல் ஏதோ பேசினார். போலிருந்தது. பேச்சல்ல அது - பிரார்த்தனை ஓ! ஆகாயத்தில் மேயும் மேக மந்தைகளே! உங் கள் வாழ்நாள் சதமென்று எண்ணியிருக்கிறீர்களா? குளிர்ந்த காற்றுத்தான் உங்கள் எமன் என்பதை மறந்து விடாதீர்கள்! மேகங்களே! உங்கள் சாவுக் கண்ணீர் மாநி லத்தை வாழவைக்கவும் உதவுகிறது. சில சமயம் அழிக்கவும் உதவுகிறது! ஆனாலும் உங்கள் சாவுக் கண்ணீர் வாழ்க! அது போல என் சாவுக் கண்ணீர் யாரையும் வாழவைக்காதா என்று ஏங்குகிறேன். மேகப் பிராணிகளே உங்கள் சாவுக் கண்ணீரின் சக்தியை இந்த ஏழை மனிதனின் சாவுக் கண்ணீருக்கு தாருங்கள் உம்-சீக்கிரம் ! அந்த குளிர்காற்று வீசுவதற்குள் ! உடனே! உடனே !" -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதையல்.pdf/27&oldid=1719273" இலிருந்து மீள்விக்கப்பட்டது