உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதையல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மு. கருணாநிதி பரிமளம், "அய்யோ! எங்களை விட்டுவிடு ! பாவி! பாவி!' என்று கத்தினாள். மிச்சத் துணியால் கிழவர் பரிமளத்தின் கைகளையும் பின்புறமாக வைத்து கட்டி விட் டார்.பரிமளம் டார். பரிமளம் அலறினாள், துடித்தாள், துவண்டாள். "சப்தம் செய்தால் செத்துவிடுவாய்!" என்று கிழவர் பயங் கரமாக அதட்டினார். சற்று முன்பு, சாந்த சொரூபியாகத் தெரிந்த அந்தக் கிழவரா இவர்? உலகத்தைப் படித்தவர் போல ஆகாயத்தை நோக்கிப் பிரார்த்தனை புரிந்த அந்தக் கிழவர் தானா இவர்? பரிமளத்திற்கு எதுவுமே புரியவில்லை, வருவது வரட்டும் என்று எண்ணிக் கொண்டாள். துரை யைப் பார்க்க முடியாமல் தன் கண்கள் மூடப்பட்டு விட் டதை நினைத்து அழுதாள். அந்த அழுகை, அவள் கண்ணை மூடியிருக்கும் துணியை நனைக்கத்தான் பயன்பட் டது போலும் - கிழவரின் இருதயத்தை நனைத்திடப் பயன் படவில்லை. "அத்தான்! அத்தான்!” என்று மட்டும் மெது வாக மு முணகினாள். கண்ணைத் திறக்க முடியாமல் மெய் மறந்து கிடக்கும் காதலன், அவனைப் பார்க்க முடியாமல் கட்டுண்டு தவிக்கும் காதலி அந்த இருவரிடையே கிழவ னார். அவருடைய முகத்திலே நிலவொளி லேசாகப் படர்ந் திருந்தது. சுருக்கம் விழுந்த அவர் கன்னங்களில் கண்ணீர்த் துளிகள் உருண்டு திரண்டு நின்றன. சாந்தமும்- அமைதியும்-அடக்கமும் - கலந்த வார்த் தைகளை ஆகாயத்திலே மேயும் மேகக் குழுவை நோக்கி அனுப்பியவர்--திடீரென பயங்கர மனிதனாக மாறி - அந்த மாற்றமும்- உடனே அகன்று அவரால் பாதிக்கப்பட்டுக் கிடக்கும் அந்த இருவரிடையே நின்றுகொண்டு கண்ணீர் விடுகிறார்! ஏன்? சுருங்கிய கன்னத்திலே உள்ள கோடு களில் பாதரசம் போல உருண்டோடும் நீர்த் துளிகள் அவரது தும்பைப் பூ தாடியிலே படியும் போது காலைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதையல்.pdf/32&oldid=1719280" இலிருந்து மீள்விக்கப்பட்டது