உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதையல்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதையல் 29 6: "என்ன பரிமளம்?” கேட்டான் துரை. 66 என்று நடுங்கும் தொனியில் - பின் அந்த முரடர்களைப் போலவே யிருக்கிறது தொடருகிறார்கள்” என்று அவள் சொல்லி வாய் மூடுவ தற்குள் உப்பரிகையின் மேல் பகுதியிலிருந்து துரையின் தலையில் ஒரு அடி பலமாக விழுந்தது. ஆம்; அந்தக் கிழவர் தான் தன பலங்கொண்ட மட்டும் ஒரு கட்டை யால் துரையைத் தாக்கி விட்டார். திடீரென ஏற்பட்ட அதிர்ச்சியில் துரை மூர்ச்ை யடைந்தான் துரையின் மீது பரிமளம் பாய்ந்து வாரி அணைத்துக் கொண்டாள். அத்தான்" என்று இப்போது அவள் கூ உறியபோது அடடா! அந்த முறைச் சொல்லிலே தான் சொல்லிலே தான் எவ்வளவு ஜீவன் இருந்தது. அழகான பெண்களின் சோக மயமான முகம் ஒரு புதிய பொலிவோடு விளங்கும். அந்தப் பொலி வுப் பதுமையாள் சிந்தும் சோகச் சொல்லிலே கூட ஒரு தனித்த சுவை யிருக்கத்தான் செய்கிறது. பரிமளம், அத்தான் " என்று அவனைத்தழுவிக் கொண்டு, அவ னது முகத்தை தனது காந்தள் விரல்களால் வருடிய போது காதல் வீணையின் சோகஸ் தாயியை கலையரசி ஒருத்தி எழுப்புவது போலவேயிருந்தது! பாச மலரின் இதழ்கள் எவ்வளவு மென்மையானவை. அந்த மலர் சூடான கண்ணீர்த் துளிகளால் நனையும் போது எவ்வளவு குளிர்ச்சி பெறுகிறது, அத்தகைய ஒரு அன்பு மலராகத் தான் காட்சி தந்தாள் பரிமளம். அந்தக் காட்சி அந்த இடத்திலே அதிக நேரம் அனுமதிக்கப்படவில்லை. நின்று கொண்டிருந்த கிழவர் பரிமளத்தின் கையைப் பிடித்துப் பர பரவென இழுத்து, அவள் திமிறி ஓட முயன்றும் விடாமல் அவளது கண்களை இறுகக் கட்டி விட்டார், தன் மேலிருந்த துண்டு வேட்டியினால்! கண்ணைக் கட்டியது போக மிச்சமிருந்த துண்டைக் கிழித்துக் கொண்டார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதையல்.pdf/31&oldid=1719279" இலிருந்து மீள்விக்கப்பட்டது