28 மு. கருணாநிதி என்ற ஒலிதான் அது! துரை ஆச்சரியத்தோடு மேல் நோக்கினான். கிழவரின் குரல் நடுக்கமின்றி ஒலித்தது! ஓ, ஆகா யத்தில் மேயும் மேக மந்தைகளே! உங்கள் வாழ்நாள் சத மென்று எண்ணியிருக்கிறீர்களா? குளிர்ந்த காற்றுத் தான் உங்கள் எமன் என்பதை மறந்து விடாதீர்கள்! பழைய பிரார்ந்தனையில் பாதி வாசகங்களைக் கேட் டான் துரை— அதற்குள் “அத்தான்" என்ற அபயக்குரல் இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு அடித்தளத்திலிருந்து புறப்பட்டது-துரை திடுக்கிட்டுத் திரும்பினான். 3 அடித்தளத்திலிருந்து வந்த அபயக்குரல் பரிமளத் தினுடையது என்பதை உணர்ந்த துரை மிகவும் நடுங்கிப் போனான். எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் மீது கொண்ட தணியாத காதலால் பரிமளம் அந்த இரவில் தன்னை சந்தித்து-இவ்வளவு இடையூறுக்கும் ஆளாகி விட்டாளே; அதற்கு நாமும் காரணமாகி விட்டோமே- என்ற கவலையும் ஒருக்கணம் மின்னி மறைந்தது துரை யின் நெஞ்சத்தில்! ஆனாலும் சமாளித்துக் கொண்டு, கீழ் நோக்கி இறங்கினான். ஒரு உப்பரிகையின் படிகளை அவன் கடப்பதற்குள்ளா கவே இன்னொரு சப்தம் "அத்தான்" என்று அவன் எதிரே கேட்டது. அவள் அவனிடம் ஓடிவந்து கொண் டிருந்தாள்.
பக்கம்:புதையல்.pdf/30
Appearance