புதையல் 27 "பரிமளம்-நீ இங்கேயே இரு-நான் மேலே போய் பார்த்துவிட்டு வருகிறேன். என்று கூறிவிட்டு துரை மேலே ஏறினான். பரிமளம் எதுவும் புரியாமல் கடலையே பார்த்துக் கொண்டிருந்தாள். அலைகடல் போலவே அவள் உள்ளமும் ஆகியிருந் தது. துரை கிழவரைத் தொடர்ந்து கொண்டே போனான். ஒன்று இரண்டு-மூன்று! ஏழாவது உப்பரிகையிலே கிழவர் ஏறிவிட்டார். துரை ஆறாம் உப்பரிகையிலே நின்று கொண்டு மேலே கவனித்தான். ஒரே நிசப்தம். எதுவும் நடைபெறுவதாகத் தெரியவில்லை. உப்பரிகைப் பலகணி வழியாக கடற்கரையை அவன் பார்க்க முடிந்தது. கடற் கரையைப் பார்த்தான், ஆம்-உள்ளபடியே அவன் நடுங்கி விட்டான். அவர்களைத் தொடர்ந்த அந்த முரடர்கள் மனோராவின் பக்கம் வந்து கொண்டிருந்தார்கள். ஆம்- அவர்களே தான் நிச்சயமாகத் தெரிந்து கொண்டான். ஆனால் பரிமளமோ வேறு திசையில் நின்று - மனோரா வின் முதல் தளத்திலிருந்தபடி கடலை பார்த்துக் கொண் டிருந்தாள். துரைக்கு எதுவுமே புரியவில்லை. - உச ச்சியிலே கிழவர் ! உப்பரிகையின் அடித் தளத் திலே குமரி ! ஆம்-காதல் குமரி. அவளை அவன் காப் பாற்றித் தீர வேண்டும். உச்சிக்குப் போன கிழவர் அதற்கு மேல் எங்கும் போக முடியாது. அவரை எப்படி யும் பிறகு பார்த்து விடலாம்-முதலில் பரிமளத்தைக் க காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் துரை கீழே திரும்பினான். அப்போது மேலே ஒரு சப்தம் கேட்டது. “சாவுக் கண்ணீர்! சாவுக் கண்ணீர்!”
பக்கம்:புதையல்.pdf/29
Appearance