உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதையல்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- புதையல் 47 யாவது சதி செய்து கொன்றுவிட்டு, அவரிடமுள்ள பொன் குவியல்களையும் கைப்பற்றிவிட வேண்டுமென்று தீர்மானித்தார்கள். உயர்ந்த உயர்ந்த ஜாதிக்காரர்களாகிய தம் மிடம், சாதாரணமான ஒரு கொல்லர்- சம்பந்தம் வைத்துக் கொள்ள எண்ணியது மகா பாபம்-பெரிய குறும்புத்தனம் -என்றெல்லாம் அந்த வேளாளர் மரபினர் ஆத்திரப்பட்டு துடித்தனர். எப்படியோ சதி உருவாகி விட்டது. கொல்ல ரிடம் சென்று, அவரது பெண்ணை தங்கள் மணமகனுக்குத் திருமணம் செய்ய சம்மதமென்றும், ஆனால் - தங்கள் வழக்கப்படி-கடலிலே தான் திருமணம் நடக்க வேண்டு மென்றும் கூறினார்கள். சதியை உணராத அ ந்த க் கொல்லரும் அதற்கு சம்மதித்தார். இரண்டு மூன்று படகுகளில் மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும் புறப்பட்டனர். ஒரு படகில் கொல்லர்-அவர் பெற்ற பைங்கொடி இன்னும் சில உறவினர் - அவரது மகன் ஜாதி கள்; மற்றொரு படகில், மாப்பிள்ளை, அவரது வீட்டார்; இன்னொரு படகில் சதித் திட்டத்தை நிறைவேற்ற ஏற் பாடு செய்யப்பட்ட ஆட்கள். இப்படி மூன்று படகுகளும், கடலிலே பிரயாணம் நடத்துகின்றன. ஜாதி ஆசாரப்படி கடலிலே திருமணம் நடக்கப் போகிறது யிருக்கிறார்கள் பெண் வீட்டார்கள். படகுகள் மூன்றும் வேளாளர் வீட்டார் ஒருவர் உரத்த குரலில் நின்றன. சொன்னார்- என எண்ணி உம்! கல்யாணத்தை ஆரம்பிக்கலாம்! ” என்று ! அவர் சொல்லி வாய் மூடுவதற்குள், மூன்றாவது பட கில் இருந்தவர்கள் பெண் வீட்டாரின் படகில் பாய்ந்து குதித்து அந்தப் படகை அப்படியே கடலில் கவிழ்த்து விட்டார்கள். ஆ அந்தோ பரிதாபம்! எதிர்காலத்தை எண்ணி தப் பட்டிருந்த அந்த அழகியும், அவள் அப்பனும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதையல்.pdf/49&oldid=1719298" இலிருந்து மீள்விக்கப்பட்டது