உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதையல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மு. கருணாநிதி அண்ணனும் ஆழ்கடலில் மிதந்து விட்டார்கள் கோலம் காண வந்தவர்கள் பிணக்கோலம் பெற்றனர். சதி வேலையை வெற்றிகரமாக முடித்துவிட்ட வேளாளப் பெரு மக்கள், மருங்கப்பள்ளம் திரும்பி வந்து, கொல்லருடைய வீட்டை சோதனை போட்டார்கள். பொன் குவியல்களை அபகரிக்க துடித்து நின்றார்கள்! ஆனால் ஒரு சிறு துண்டு கூட கிடைக்கவில்லை. கொல்லர், முன் ஜாக்கிரதையாகவே; அவைகளை எல்லாம் தனக்கு மட்டும் தெரிந்த இடத்திலே புதைத்து விட்டார். பொன்னை மட்டுமல்ல! பொன் யும் அந்தக் கல்லையும் புதைத்து விட்டார். சய் குளிசக் கல் என்று கூறுகிறார்களே; அந்தக் கல்லுக்கு இடப்பட்ட பெயர்தான் அது! கொல்லர் குடும்பத்தை அழித்துவிட்டு, பொன்னும் கிடைக்காமல் ஏமாந்த காரணத்தால், அந்த முயற்சியில் ஈடுபட்ட வேளாளர்கள் இலங்கையில், யாழ்ப் பாணத்திலிருக்கும், காரை என்னும் தீவில் போய் குடி யேறி விட்டார்கள்” கிழவர் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, இப்படிக் கதை சொல்கிறார்கள்; என்றார். "ஆமாம் - அந்தக் கல்லைப் பற்றிக்கூட எந்தத் தக வலும் கிடைக்காதா?" என்று ஆவலோடு கேட்டான் ஐயப்பன். "ஏன்? கிடைத்தால் நீ எடுத்து, பொன்னுருக்கலாம் என்று பார்க்கிறாயா?” “கதை மட்டும் நிஜமா இருந்து, அந்த பொன்னெல் லாம் எனக்கிட்ட கிடைச்சா; ஆகா!" "என்ன செய்வே; சிதம்பரம் நடராசருக்குப் போட்டது மாதிரி; திருவாரூர் தியாகராசருக்கு தங்க ஓடு போடுவா யாக்கும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதையல்.pdf/50&oldid=1719299" இலிருந்து மீள்விக்கப்பட்டது