பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


<。 D-1" 2- Kت ال/ مnبالع புது உருவம் பெற்று வளர்ந்துள்ளது. ஜப்பானிலே பெளத்த தருமத்தின் பக்தி மார்க்கமாக ஜென் பெளத்தம் செழித்து உரம் பெற்றுள்ளது. இன்று மாநில மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பெளத்த தருமத்தைப் போற்றி வருகின்றனர் என்று சொல்லலாம். இன்று புத்தரைப் பற்றியும். 2500 ஆண்டுகட்கு முன்னர் அவர் அருளிய அரிய உபதேசங்களைப் பற்றியும் உலகின் பல பாகங்களிலும் அளவற்ற ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அழிவுப் பாதையில் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் நம் உலகைப் பெளத்த தருமமே பாதுகாக்கும் என்று அறிஞர் பலரும் கருதுகின்றனர். புத்தர் பெருமானின் உருவ அழகு பற்றி வரலாறுகளும், கதைகளும் ஒருமுகமாகப் புகழ்ந்து கூறுகின்றன. 'வெண் திரையின் மீது விரிகதிர்கள் நான, எரிதழல் தோற்றம், ஆண் யானை போன்ற நடை, மானின் கால்களைப் போன்ற கால்கள். மெல்லிய உடல், பொன் நிறம். நீண்ட விரல்கள். தடக்கைகள், சங்குபோல் உருண்டகனைக் கால்கள். அடர்ந்து இருண்ட தலைமுடி, கருநீலக் கண்கள். பசுவின் இமைகளைப் போல் நீண்டு அகன்ற இமைகள். பவள வாய், முத்துப் பற்கள். அமைதியான ஒளிபரப்பும் திருமுகம் - இத்தனை எழில் நலன்களும் கொண்டு. அவர் மக்களையும், மன்னர்களையும், மறையோர்களையும் வசீகரித்து வந்ததில் ஆச்சரியமில்லை யென்றே தோன்றுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவருடைய குரல் இமயமலைச் சாரலிலேயுள்ள இசைப் பறவையின் குரலைப் போன்றது என்றும் குறிக்கப் பெற்றுள்ளது. புத்தர் சாத்திரங்களையோ, புராணங்களையோ மேற்கோள்களாகக் கொள்ளவில்லை. கண்முன்பு கண்ட விஷயங்களையே ஆதாரமாய்க் கொண்டு, பகுத்தறிவுக்கு ஒத்த முறையிலேயே உபதேசங்கள் செய்துவந்தார். உலகில் எங்கணும் துக்கம் நிறைந்திருப்பதைக் கண்டு, அவர் அதன் காரணத்தை ஆராய்ந்து பார்த்தார். துக்கத்தின் காரணம் அவா. அவாவின் காரணம் பேதைமை என்பது அவர் முடிவு. இவைகளை நீக்கி, மனிதன் விடுதலை பெற்று முன்னேறி, நிருவானப் பேற்றை அடைவதற்கு அவர் வகுத்துள்ள வழி அஷ்டாங்க மார்க்கம். முதலாவதாக தெளிந்த பார்வை - நற்காட்சி - வேண்டும். இதனாலேயே பொருள்களின் உண்மை இயல்பை உணர முடியும். புலன் இன்பங்களைத் துறந்து, மனக்காழ்ப்பில்லாமல், அஹிம்சை நெறியிலே நிற்க வேண்டும். இது நல்லுற்றம். பொய்யுரை.

  • ]