4. தியானம்
வெளியேயுள்ள பொருள் எதையும் பற்றிக் கவனியாமல், (புலன்களின் மூலம் ஏற்படும்) உணர்ச்சிகளையும் விட்டு, உலகப்பொருள் எதிலும் சம்பந்தமில்லாத தியானத்தில் ஆழ்ந்திருக்கும்போதுதான், ததாகதர்' நிம்மதியாக இருக்கிறார். '
★★
தியானத்திலிருந்து ஞானம் உதயமாகிறது. தியானமில்லாவிடில் ஞானம் குறைகிறது. ஆக்கமும் கேடும் வரக்கூடிய இந்த இரு வழிகளையும் அறிந்து, அறிவு பெருகும் வழியை மனிதன் மேற்கொள்வானாக. '
★★
எவன் தியானத்தின் முடிவான உபசாந்தியை அடைந்துள்ளானோ, எவன் பயத்தையும், பாசத்தையும், பாவத்தையும் ஒழித்து விட்டானோ, அவன் பிறவியாகிய முட்களைக் களைந்தெறிந்தவன், (பல கந்தங்களால் அமைந்த) இந்தச் சடலமே அவன் (எடுக்க நேர்ந்த) கடைசி உடம்பாம். '
★★
ஐந்துவகைப் பாவனைகள் ள்ளன.
முதலாவது பாவனை அன்பைத் தழுவிய மைத்திரீபாவனை: இதிலே, உங்களுடைய பகைவர்கள் ஸ்விட் எல்லோருடைய நன்மையையும் விரும்பி உங்கள் படிவம் ஒரு நிலைப்பட்டி ருக்கும்படி செய்துகொள்ள வேண்டும்
இரண்டாவது பாவணை கருணையைத் தழுவிய கருனா - பாவனை: இதிலே துயரப்படுகின்ற சகல ஜீவன்களையும் பற்றி எண்ணி, அவர்கள் துக்கங்களையும் கவலைகளையும் கற்பனை செய்து கண்டுகொண்டு, அதன் மூலம் அவர்களிடம் உள்ளத்தில் கருணை எழும்படி செய்துகொள்ள வேண்டும்.
மூன்றாவது பாவனை ஆனந்தத்தைத் தழுவிய முதித பாவனை: இதிலே மற்றவர்களுடைய இன்ப நலன்களைப் பற்றி எண்ணி, அவர்களுடைய ஆனந்தங்களோடு கலந்து இன்புற வேண்டும்.
" ததாகதர் - முன்னோர் வழியிலே செல்பவர் என்று பொருள் இங்கு புத்தர் புத்தர் பெருமான் தம்மைத் ததாகதர் என்று சொல்லிக் கொள்வது வழக்கம்.
ப.ராமஸ்வாமி \ 21