பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்காவது பாவனை அசுத்தத்தைப் பற்றிய அசுப - பாவனை, இதிலே, ஒழுக்கக் குறைவு, பாவங்கள், நோய்கள் ஆகியவற்றால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி எண்ண வேண்டும். கனநேரத்து இன்பம் எவ்வளவு விபரீதப் பயன்களை உண்டாக்குகின்றது என்பதைக் கருதவேண்டும். ஐந்தாவது பாவனை எல்லாவற்றையும் சமமாகப் பார்க்கும் உபேட்சா - பாவனை, இதிலே, விருப்பு, வெறுப்பு, கொடுமை, துன்புறுத்தல், செல்வம், வறுமை முதலியவற்றிற்கு மேலாக எழுந்து, உங்கள் நிலைபற்றி, ஆசையோ, வெறுப்போ இல்லாமல், பூரணமான சாந்தியுடன் கருதவேண்டும். ' + or (தியானங்களில் நான்கு வகை உண்டு. ஏகாந்தமான இடத்திலே அமர்ந்திருந்து, புலன் இன்பங்களைத் துறப்பது பற்றிச் செய்யும் தியானம் முதலாவது: இன்பமும் எழுச்சியும் நிறைந்த உபசாந்தியைப் பெறுதல் இரண்டாவது தியானம்; உடலுக்கு அ. ப்பாற்பட்ட இன்பத்தில் திளைக்கும் முறையில் செய்யும் தியானம் மூன்றாவது: பரிசுத்தமான பூரண சாந்தி நிறைந்த நிலையில் மனம் இன்ப - துன்பங்களுக்கு மேலாக எழுந்து நிற்கும்படி செய்யும் தியானம் நான்காவது. ) முதல் தியானம்; இதிலே பிக்கு, புலனாசைகளை விட்டு ஒதுங்கி, தீய நிலைகளை விட்டு ஒதுங்கி, முதல் தியானத்தில் பிரவேசிக்கிறார். ஏகாக்ரகமான நிலைத்த சிந்தனையுடன் இருக்கிறார். இரண்டாம் தியானம்: பிறகு ஏகாக்ரகமான நலைதத சநதனையையும் உள்ளடக்கி, அவர் இரண்டாம் தியானத்தில் பிரவேசிக்கிறார்; இதில் உள்ளமைதியும் உள்ள உறுதியும் அதிகரிக்கின்றன. மூன்றாம் தியானம்: எழுச்சியை அடக்கிக்கொண்டு, உபேட்சா பாவனையோடு, பிக்கு, கருத்தோடும், தன்னடக்கத்தோடும் இருப்பது மூன்றாம் தியானம்; அவர் உடலோடு இருக்கும்போதே ஆனந்த நிலையை அநுபவிக்கிறார். இந் நிலையை ஆரியர்கள் சமதத்துவ மடைந்தவர் களின் ஆனந்தம்' என்று சொல்வார்கள்.

  • ஆரியர்கள் - மேலோர்கள்.

22 | புத்தரின் போதனைகள்