பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்பமானதையோ துன்பமானதை யோ எவனும் பற்றிக் கொண்டிருக்க வேண்டாம். இன்பமானதைக் காணாமையும் துக்கம்: துன்பமானதைக் காண்பதும் துக்கமே.

ஆசைப்பட்டதிலிருந்து சோகம் தோன்றுகிறது. ஆசைப்பட் திலிருந்து அச்சம் தோன்றுகிறது:ஆசையற்றவனுக்குச் சோகமில்லை: பயம்தான் ஏது?

மக்கள் நிலையற்ற பொருளிலேயே பெரும்பாலும் நாட்டத்தைச் செலுத்துகின்றனர்; ஆனால் அனல் வெள்ளம்போல வாழ்க்கையின் முடிவு வந்து ஒரே கணத்தில் அதை அடித்துக்கொண்டு போகின்றது. எரிகின்ற விளக்கைக் கவனிப்பதற்கு நியமிக்கப் பெற்ற குருடனைப் போன்றவர்கள் அவர்கள். ஆனால் ஞானி, உலக சம்பந்தங்கள் அழியும் தன்மையுள்ளவை என்பதை உணர்ந்து, துக்கச் சுழலிலிருந்து தப்பித்துக் கொள்கிறான். தரும - ஞானம் மனிதனை உலக இன்ப துன்பங்களிலிருந்து மேலேறச் செய்து, அவனுக்கு நித்தியமான சாந்தியை அளிக்கின்றது. ' ੋਂ நிலைத்த, புனிதமான பேரின் பத்திற்காக அநித்தியமான உலக இன்பங்களைத் துறக்கும் பிக்குவின் செயலே உண்மையான பெரிய சித்தி அற்புதம் - (வேறு அற்புதங்களைச் செய்து காட்ட வேண்டியதில்லை.) "

உனது இயதம் இன்னும் 'நான்' என்ற ஆணவத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறது; சுவர்க்கத்தைப் பற்றி நீ ஆவல் கொண்டிருப்பினும், அங்கேயும் உன் ஆணவத்திற்குரிய இன்பங்களையே விரும்பிக் கொண்டிருக்கிறாய்; எனவே தருமத்தின் இன்பத்தையும், தருமத்தின் நித்தியத் தன்மையையும் நீ உணர முடியவில்லை." இவ்வுரை கூததந்தர் என்ற வேதியருக்குக் கூறப்பட்டது. 44 | புத்தரின் போதனைகள்