பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 103

யசோதரையார் தாமும் பிக்குணியாக விரும்பினார். ஆனால், பகவன் புத்தர் அதற்கு இணங்காமல், அவருக்குத்துறவு கொடுக்க மறுத்தார்.

இராகுலன்

கபிலவத்து நகரத்திற்குப் பகவன் புத்தர் வந்து ஏழாம் நாள், பிக்கு சங்கத்தாருடன் அரண்மனைக்குப்போய் பகவன் புத்தர் உணவு கொண்டார்.அப்போது யசோதரைத் தேவியார், தமது ஏழுவயதுள்ள இராகுல குமாரனை நன்றாக அலங்காரம்செய்து, "மகனே! அதோ பிக்குகள் சூழப்போகிற, பொன்நிறமாகப் பிரகாசிக்கிறவர் உன்னுடைய தகப்பனார். உனக்கு உரியதை அவரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்" என்று கூறிஅனுப்பினார். இராகுல குமாரன் புத்தரிடம்போய், மிக அன்போடு "ஓ! சிரமணரே! தங்களுடைய நிழல் எனக்கு மிகவும் சுகமானது" என்பது முதலாகச் சில வார்த்தைகள் கூறினார். பகவன் புத்தர் பிக்கு சங்கத்துடன் உணவு கொண்டபிறகு அனுமோதனா தர்மோபதேசம் செய்து ஆசனத்திலிருந்து எழுந்து நடந்தார். இராகுல குமாரனும், "சிரமணரே! எனக்குக்கிடைக்க வேண்டியதைக் கொடுங்கள்" என்று பின்தொடர்ந்து சென்றான்; புத்தரும் குமாரனை வரவேண்டாமென்று தடுக்கவில்லை. பார்த்துக் கொண்டிருந்தவர்களும் தடுக்கவில்லை. குமாரன் பகவரைப் பின்தொடர்ந்து விகாரைக்குச் சென்றார்.

பகவன் புத்தர், எனக்குப் போதிமண்டலத்திலே கிடைத்த ஏழுவிதமான உத்தம தனத்தை இவனுக்குக் கொடுப்பேன் என்று தமக்குள் நினைத்து, சாரிபுத்திரதேரரை அழைத்து, இராகுல குமாரனுக்குச் சந்நியாசம் தரும்படிச் சொன்னார். சாரிபுத்திர தேரர், "சுவாமி, எப்படிச் சந்நியாசம் கொடுப்பேன்?" என்று கேட்க, பகலர், திரிசரணத்தை எடுக்கச் செய்து ஸாமநேர சந்நியாசத்தைக் கொடுக்கச் சொன்னார். அவ்வாறே இராகுல குமாரனுக்குச் சந்நியாசம் கொடுக்கப்பட்டது.

இராகுல குமாரனுடைய சந்நியாசத்தைச் சுத்தோன அரசன் அறிந்து மிகவும் விசனமடைந்தார். அவர் பகவன் புத்தரிடம் வந்து, வணக்கம் செய்து ஒரு பக்கத்திலே இருந்து பெற்றோர்களுடைய அனுமதியில்லாமல் சிறுவர்களுக்குச் சந்நியாசம் கொடுக்கக்கூடாது என்னும் வரந்தரும்படி வேண்டிக்கொண்டார். பகவன் புத்தர் அதற்கு இணங்கிப் பிக்ஷக்களை அழைத்து, "பிக்ஷக்களே! இனி,