பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140 / புத்தரின் வரலாறு

8. மருள் அறுத்த பெரும்போதி மாதவரைக்
கண்டிலனால் - என்செய்கோயான்!
அருள்இருந்த திருமொழியால் அறவழக்கங்
கேட்டிலனால் - என்செய்கோயான்
பொருள்அறியும் அருந்தவத்துப் புரவலரைக்
கண்டிலனால் - என்செய்கோயான்

9. தோடார் இலங்கு மலர்கோதி வண்டு
வரிபாட நீடு துணர்சேர்
வாடாத போதி நெறிநீழல் மேய
வரதன் பயந்த அறநூல்
கோடாத சீல விதமேவி வாய்மை
குணனாக நாளும் முயல்வார்
வீடாத இன்ப நெறிசேர்வர்! துன்ப
வினை சேர்தல் நாளும் இலரே!

10. எண்டிசையும் ஆகி இருள் அகல நூறி
எழுதளிர்கள் சோதி முழுதுலகம் நாறி
வண்டிசைகள் பாடி மதுமலர்கள் வேய்ந்து
மழைமருவு போதி உழை நிழல்கொள் வாமன்
வெண்டிரையின் மீது விரிகதிர்கள் நாண
வெறிதழல் கொள் மேனி அறிவனெழில்மேவு
புண்டரிக பாதம் நம சரணம் ஆகும்
எனமுனிவர் தீமை புணர்பிறவி காணார்.

11. மிக்கதனங் களைமாரி மூன்றும் பெய்யும்
வெங்களிற்றை மிகுசிந்தா மணியை மேனி
ஒக்க அரிந் தொருகூற்றை இரண்டு கண்ணை
ஒளிதிகழும் திருமுடியை உடம்பில் ஊனை
எக்கிவிழுங் குருதிதனை அரசு தன்னை
இன்னுயிர் போல் தேவியைஈன் றெடுத்த செல்வ
மக்களைவந் திரந்தவர்க்கு மகிழ்ந்தே யீயும்
வானவர்தாம் உறைந்தபதி மானா வூரே.

12. வான் ஆடும் பரியாயும் அரிண மாயும்
வனக்கேழல் களிறாயும் எண்காற் புள்மான்
தானாயும் பணைஎருமை ஒருத்த லாயும்
தடக்கை யிளங் களிறாயும் சடங்க மாயும்
மீனாயும் முயலாயும் அன்ன மாயும்
மயிலாயும் பிறவாயும் வெல்லுஞ் சிங்க