பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92 / புத்தரின் வரலாறு

உருவேல காசிபர்

உருவேல காசிபரின் எண்ணத்தை அறிந்த பகவன் புத்தர், மற்றும் சில கிருத்திகளைச் செய்து காட்டினார். அப்போது காசிபர் அவரைப் பற்றித் தவறாகக் கருதிக்கொண்டிருந்த எண்ணத்தை நீக்கிப் பகவள் புத்தரிடம் தருமோபதேசம் கேட்டுப் பெளத்தரானார். அவருடன் இருந்த சீடர்களும் பௌத்தர் ஆயினர், பிறகு, அந்தச் சடிலர்கள் எல்லோரும் பகவன் புத்தரிடம் ஏஹிபிக்ஷுவிதமாகச் சந்நியாசமும் உபசம்பதாவும் பெற்றார்கள்.

நாதீ காசிபர்

உருவேல காசிபரும் அவருடைய சீடர்களும் பௌத்தராகிச் சந்நியாசம் பெற்றபோது, தங்களுடைய சடைகளை மழித்துத் துணிமணிமுதலிய பொருள்களை நதியிலே போட்டார்கள். நேரஞ்சர நதிக்கரையிலே இன்னொரு இடத்தில் இருந்த நாதீகாசிபர், ஆற்றிலே போகிற இந்தப் பொருள்களைக் கண்டு, தமது தமயனாருக்கு ஏதேனும் தீங்கு நேரிட்டதோ என்று ஐயம் அடைந்து, தமது சீடர்களுடன் புறப்பட்டுத் தேடிவந்தார். வந்த அவர், தமது தமயனாரும் அவர் சீடர்களும் பௌத்த சந்நியாசிகளாக இருப்பதைக் கண்டு, "இந்தத் துறவு நிரம்ப நல்லதோ?" என்று கேட்டார்.

"ஆமாம், தம்பி! தாபச சந்நியாசத்தைப் பார்க்கிலும் இந்தச் சந்நியாசம் உத்தமமானது என்று உருவேல காசிபர் கூறினார். இதைக்கேட்டு நாதீகாசிபரும் அவரது சீடர்களும் தங்களுடைய சடைமுடி முதலியவைகளைக் களைந்து ஆற்றிலே போட்டுவிட்டு, பகவன் புத்தரிடம் சென்று தர்மோபதேசங் கேட்டார்கள். புத்தர் அவர்களுக்கு உபதேசம் செய்து, அவர்கள் வேண்டுகோளின்படி அவர்களுக்கு ஏஹிபிக்ஷு சந்நியாசம் கொடுத்தார்.

கயா காசிபர்

இவர் ஆற்றில் எறிந்த சடைமுடி முதலிய பொருள்கள் ஆற்றிலே போவதைக் கண்ட மூன்றாவது சகோதரராகிய கயாகாசிபர், தமது தமயனாருக்கு ஏதோ தீங்கு நேரிட்டதுபோலும் என்று கருதி. சீடர்களுடன் புறப்பட்டு வந்தார். வந்து, அவர்கள் பௌத்தத் துறவிகளாக இருப்பதைக் கண்டு, "தாபச சந்நியாசத்தைவிட இந்த சந்நியாசம் உத்தமமானதா?" என்று வினவினார். "ஆமாம்! இந்தச் சந்நியாசம் அதைவிட உயர்ந்தது, மேலானது!" என்று கூறினார்கள்.