பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 93

இதைக்கேட்ட கயாகாசிபரும் தமது சீடர்களுடன் சடாமுடி முதலியவற்றைக் களைந்துபோட்டுத் தர்மோபதேசங் கேட்டு பௌத்தத் துறவியானார்கள்.

ஆதித்த பரியாய சூத்திரம்

பகவன் புத்தர் சில நாள் அங்குத் தங்கியிருந்த பின்னர், தமது சீடர்களையெல்லாம் அழைத்துக்கொண்டு கயா நகரத்தின் பக்கமாகச் சென்றார். அங்குச்சென்று ஒரு பாறையின்மேலே அமர்ந்து, தமது சீடர்களுக்கு ஆதித்த பரியாய சூத்திரத்தை உபதேசம் செய்தார். அச்சூத்திரத்தின் சுருக்கம் இது: உலகத்தில் எல்லாப்பொருள்களும் தீப்பற்றி எரிகின்றன. கண் என்னும் பொறி தீப்பற்றி எரிகிறது. ரூபம் உருவம் என்னும் தீயினாலே விஞ்ஞானத்தைத் தீப்பிடித்து இருக்கிறது. சக்ஷ ஸ்பர்ஸ மூலமாக வருகின்ற சுகம் துக்கம் உபேக்ஷை என்கிற மூன்று விதமான வேதனை நெருப்பினால் தீப்பற்றி எரிகிறது.

"இவ்வாறே ஐம்புலன்களிலும் தீப்பற்றி எரிகிறது. எந்த விதமான தீ என்று கேட்கிறீர்களா? ராகத் தீ, தோஷத் தீ, பிறப்பு, நரை, திரை, மூப்பு, மரணம், சோகம், துன்பம், விருப்பு, வெறுப்பு என்கிற தீயினாலே எல்லாப் பொருள்களும் தீப்பற்றி எரிகின்றன."

இந்த ஆதித்த பரிபாய சூத்திரத்தை உபந்யசிக்கக் கேட்ட பிக்குகள் அர்ஹந்த பலன் அடைந்தார்கள்.

பிறகு பகவன் புத்தர்சீடர்களோடு புறப்பட்டு, முன்பு விம்பசார அரசனுக்குச் செய்த வாக்குறுதியை நிறைவேற்ற, இராசகிருக நகரம் நோக்கிச் சென்றார். பன்னிரண்டு மைல் தூரமுள்ள வழியைக் கடந்து தலாவனம் என்னும் பனஞ்சோலையையடைந்து அங்கே ஒரு பெரிய ஆலமரத்தின் கீழே எழுந்தருளியிருந்தார்.

விம்பசர்ரன் பௌத்தனானது

பகவர் எழுந்தருளியிருக்கிறார் என்பதை அறிந்த விம்பசாரன் அரசன், தன்னிடம் விருந்தாக வந்திருந்த லிச்சாவி அரசனான மஹாலியுடனும் வச்சபாலன் முதலிய பிராமணர்களுடனும் மந்திரி பிரதானிகள் முதலிய பரிவாரங்களுடனும் வந்து பகவரை அடிபணிந்து தொழுதான். பகவன் புத்தரையும் அவருடன் இருந்த ஜடிலத் துறவிகளையும் கண்ட பிராமணர்கள், புத்தர் ஜடிலருடைய சீடரா அல்லது ஐடிலர்கள் புத்தருடைய சீடரா என்று ஐயப்பட்டார்கள். இதனை அறிந்த பகவன் புத்தர், அவர்களுடைய