பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94 / புத்தரின் வரலாறு

ஐயத்தை நீக்கும்படி ஜடிலருக்குக் கூறினார். அப்போது உருவேல காசிபர், தாங்கள் பகவன் புத்தருடைய உபதேசத்தைக் கேட்டு அக்கினி பூசை பயனற்றது என்று தெரிந்து, தாங்கள் அவருக்கு சீடரான செய்தியை விளக்கமாக பிராமணர்களுக்கு கூறினார். இதனைக் கேட்ட வச்ச பாலன் முதலிய பிராமணர்களும் திரிசரணம் அடைந்தார்கள். பிறகு உருவேல காசிபரைப் புகழ்ந்து கூறினார்கள். அப்போது பகவன் புத்தர், இப்போது மட்டுமல்ல பூர்வ ஜன்மங்களிலும் வட உருவேல காசிபருக்கு உபதேசம் செய்திருக்கிறேன் என்று கூறி, மஹாநாரத காசிப ஜாதகக் கதையை விவரமாகச் சொன்னார்.

பிறகு விம்பசார அரசனுக்கும் அவனுடன் வந்திருந்தவர்களுக்கும் தானகாதை முதலிய உபதேசம் செய்தார். அதனால் அவர்கள் மனம் மகிழ்ந்தார்கள். பிறகு நான்கு வாய்மை தத்துவங்களை உபதேசம் செய்தார். அதைக்கேட்ட அரசனும், மஹாலி என்னும் லிச்சாவி அரசனும் அங்கிருந்த மக்களும் சுரோத்தாபத்தி பலன் அடைந்தார்கள். ஸ்ரீ வட்டன், வச்சன் முதலான பிராமணர்களும் பௌத்தராகிச் சந்நியாசம் பெற்றார்கள். விம்பசார அரசன் மும்மணிகளைச் சரணம் அடைந்து உபாசகன் ஆனான். பிறகு, அடுத்த நாள் சீடர்களுடன் தானத்திற்காக வரும்படி பகவரை வணங்கி வேண்டிக்கொண்டு அரசன் அரண்மனைக்குத் திரும்பினான்.

வெளுவன தானம்

மறுநாள் விம்பசார அரசன், பகவரை அரண்மனைக்கு எழுந்தருளும்படி செய்தி சொல்லி அனுப்பினான். பகவர் சீடர்களோடு புறப்பட்டு இராசகிருக நகரம் சென்றார். அதிகாலையிலிருந்து அவரைக் காண்பதற்காக வந்து கூடுகிற ஜனக் கூட்டத்தைக் கடந்துவருவதற்கு அதிக நேரஞ் சென்றது. ஜனங்கள் புத்தரை வணங்கினார்கள்; அவருடைய குணங்களைப் பேசினார்கள். சிலர் அவரைவிட்டுப் பிரிய மனம் வராமல் சூழ்ந்து கொண்டார்கள். சிலர் அவர்களை விலக்கி வழிவிட்டார்கள். மக்கள் எல்லோரும் பகவன் புத்தரைக் கண்டு மனம் மகிழ்ந்தார்கள்.

ஒரு தனபதியின் மகளான சித்திரை என்பவளும்,அரசருடைய புரோகிதரின் மகளான சோமை என்பவளும், கிருகபதியொவருவரின் மகளான சுக்கிலை என்பவளும், பிராமண கன்னிகையான சுபை என்பவளும் மற்றும் சில மகளிரும், புத்தரை வணங்கி உபாசிகைகள்