பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


புத்தர் பொன்மொழி நூறு

பாயிரம்

        உலகெலாம் உய்வித்த ஒண்புத்தர்ஈந்த
        அலகில் சீர்ப் பொன்மொழிகள் ஆய்ந்தே-இலகிடப்
        புத்தரின் பொன்மொழி நூறு புனைந்துரைத்தேன்
        இத்தரையோர் வாழ இனிது.


நூல்

[அறுசீர் ஆசிரிய விருத்தம்]

1. இரட்டைச் செய்யுள் இயல்[1]

உளமது தூய தாயின்
ஒழுக்கமும் தூய தாகும்;
உளமதில் தீய எண்ணம்
உள்ளதேல், அதன்தொ டர்பாய்
வளமுறு காளை ஈர்க்கும்[2]
வழிசெலும் வண்டி போல
நலமறு துன்பம் வந்து

நண்ணுதல் உறுதி தானே.
1
பு—1
1
  1. 3
  2. 1