பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


எனையவன் இகழ்ந்து பேசி
எள்ளி[1]யே அடித்தான் என்றும்,
எனையவன் தோற்கச் செய்தே
எய்தினான் வெற்றி என்றும்,
எனதுறு பொருளை அன்னான்
ஏய்த்தனன் என்றும், என்றும்
நினைவதை மறவோ மாயின்
நிலைத்திடும் பகைமைப் பூசல்.

2


நெருப்பினை நீரால் இன்றி
நெருப்பினால் அணைத்தல் இல்லை
சிரிப்பினால் பகைவெல் லாமல்
சினத்தினால் வெல்லல் ஆமோ ?
வரிப்புலி போன்ற மிக்க
வல்லமை கொண்டார் தாமும்
இறப்பது நிலையென் றோரின்[2]
இரிந்திடும் பகைமைக் காய்ச்சல்

3


ஐம்புல[3] இன்பச் சேற்றில்
அளவிலா தழுந்து வோர்கள்
சிம்புகள்[4] சூறைக் காற்றில்
சிதைவது போலத் தேய்வர்
வம்புறு அவாவ றுத்தோர்
வருந்திட ஏது மில்லை;
மொய்ம்பு[5]று மலையைச் சூறை
முட்டியே அழித்தல் ஆமோ?

4
2
  1. 5
  2. 6
  3. 7
  4. 8
  5. 9