பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிலத்தினைப் போன்று தாங்கி
நிலைத்திடும் பொறுமைப் பண்பும்
உளைத்தினை யளவும் இல்லா
ஊருணி நேர்தூய் மையும்
நிலைத்துள வாயில் கம்பம்
நிகர்த்திடும் உறுதிக் கோளும்[1]
நலத்தொடு சேரப் பெற்றோர்
நலிந்திடார் துயரில் சிக்கி.

20


காடுதான் எனினும், சாலக்
கவர்ந்திடும் யாணர் மிக்க
நாடுதான் எனினும், நன்கு
நண்ணருங்[2] குழியென் றாலும்
மேடுதான் எனினும், நல்லோர்
மேவிடும் குடியி ருப்பே
ஈடிலா இடம தாகும்;
இவ்விடம் வாழ்தல் நன்றாம்

21


8. ஆயிரம் இயல்

ஆயிரம் பாவென் றாலும்
அரும்பொருள் இல்லை யாயின்,
ஆயுநற் பொருள்மி குந்த
அரியபா ஒன்றை ஒவ்வா.[3]
ஆயிரம் பேரைப் போரில்
ஆயிர முறைவென் றோனின்,
பாய்கிற உளத்தை வென்று
பண்படுத்து வோனே மல்லன்.

22



8

  1. 28
  2. 29
  3. 30