பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


மற்றவர் கடைப்பி டிக்கும்
மதத்தினைத் தாழ்த்திப் பேசல்,
உற்றதன் மார்பில் மல்லாந்[1]
துமிழ்வது போன்ற தாகும்.
மற்றவர் கொள்கை யாவும்
மாண்புடன் அணுகி ஆய்ந்து
நற்றமா யுள்ள வற்றை
நயமுடன் ஏற்றல் நன்று.

3


உடம்பினைப் போற்றா விட்டால்
ஒன்றுமே செயலொண் ணாதே[2],
உடம்பதின் நலவி யக்கம்
உயிரெனப் படுவ தாகும்.
உடம்பினைப் போற்று தல்தான்
உயிரினைப் போற்ற லாகும்.
உடம்பினை நன்கு போற்றி
உயர்செயல் புரிதல் வேண்டும்.

4


உலுத்திடும் கட்டை யாலே
ஒள்ளழல்[3] கடைதல் இல்லை,
அலுத்திடும் உடம்பி னாலே
அடைபயன் ஒன்றும் இல்லை.
கலைத்திறன் வளர்க்க நல்ல
கழகமும் காணல் போல,
நிலைத்திடும் உடம்பு வேண்டும்
நெடும்புகழ்ச் செயல்கள் ஆற்ற.

538
  1. 3
  2. 4
  3. 5