பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



19. சான்றோர் இயல்

69. ஆதல் உண்டோ—ஆதல் இல்லை. 70. புனைந் தோர்—ஒப்பனை (அலங்காரம்) செய்தவர்.



20. நெறி இயல்

71. மாந்துதல்—உண்ணுதல். 72. தகுநெறி எரி—தக்க அறநெறியாகிய நெருப்பு. 73. அறத்தை ஒருவிடின்—அறத்தைக் கைவிடின்.



21. பல்வகை இயல்

74. அடி 3,3— செய்ய வேண்டியதைச் செ ய் யா ச் (சோம்பும்) சோம்பலும் செய்யக் கூடாததைச் செய்தலும் வேண்டா— 75. துய்ப்பும் — அனுபவிப்பதும். 76. வன் கணை—கொடிய அம்பு.



22. அளறு இயல்

77. ஒறுப்பு—தண்டனை. 78. அளற்றுத் துன்பம்— நரக வேதனை. 79. அகம்—மனம்



23. யானை இயல்

80. உய்தி இல்—கடைத்தேறும் வழி இல்லாத. 81. பார் புரப்பவர்—உலகைக் காக்கும் அரசர். 82. சோம்பு—சோம்பல். 83. வெருவரு—அஞ்சத்தக்க.



24. அவா இயல்

84. அரங்கவும்—முற்றிலும். 85. முடுக்குறு—வலுவாகப் பொருந்தியுள்ள, 86. பற்று — ஆசை. 87. தேட்டை —

45