பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 நல்வினைகள் கல்லதை விரைவாக காட வேண்டும்; பாவத்தி லிருந்து சித்தத்தை விலக்க வேண்டும். புண்ணிய கருமத்தைச் செய்வதில் தாமதித்தால், மனம் பாவத்தில் திளைக்க ஆரம்பத்துவிடும்.' ம ணி த ன் புண்ணியத்தைச் செய்வானாகில், அதையே திரும்பத் திரும்பச் செய்வானாக. அவன் அதில் திளைத்திருக்கட்டும்; புண் ணிய மூட்டை மிகவும் இன்பகரமானது." கையில் புண்ணில்லாதவன் விஷத்தைக் கையால் தொடலாம்; புண் ணில்லாதவனை விஷம் பாதிப்ப தில்லை. திய காரியத்தைச் செய்யாதவனைப் பாவம் பாதிக்காது." o ச பாவத்தை கல்வினையால் மறைக்கும் ஒருவன், மேகத்திலிருந்து விடுபட்ட சந்திரனைப்போல், இந்த உலகை ஒளிபெறச் செய்கிறான். - கிந்தனையை ஒழித்தல், பிறரை வருத்தாமலிருத் தல், அமத்திற்கு அடங்கியிருத்தல், கிதான உணவு, ஏகாந்தமாயிருந்து உயர்ந்த சிந்தனைகளில் ஒருமைப் பட்டிருத்தல்-இதுவே புத்தருடைய உபதேசம். † துார தேசத்தில் கெடுங்காலம் சென்றிருந்தவன் சேமமாகத் திரும்பி வருகையில், சுற்றத்தாரும், கண்பர்களும், அன்பர்களும் அவனைக் களிப்போடு வரவேற்று உபசரிப்பார்கள்.