பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. பிராமணர்கள் ஒ பிராமணா1 வீரத்துடன் எதிர்த்து வெள்ளத் தைத் தடுத்து கில்; ஆசைகளை விரட்டிவிடு. படைக் கப்பட்ட எல்லாம் அழிவடையும் என்பதை உணர்ந்த பிறகு, படைக்கப்பெறாததை நீ அறிவாய்." o எவன் தியானத்துடன் உள்ளானோ, ஆசைகள் அற்றவனோ, நிலையான அமைதியுள்ளவனோ, கடமைகளைச் செய்து முடிப்பவனோ, எவன் மாசற்ற வனோ, எவன் உத்தமமான ஞானியின் முடிவான ாகிலையை அடைந்தவனோ, அவனையே கான் பிராமணன் என்று அழைப்பேன்." - மெய், வாய், மனம் ஆகிய மூன்றினாலும் பிறருக் குத் துன்பம் செய்யாது, இம் மூன்றிலும் அடக்கமுள் ளவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். 품 - ஒருவன் பிராமணனாவது சடைத்தலையால் அன்று; தன் கோத்திரத்தால் அன்று; பிறப்பினாலும் அன்று; எவனிடம் சத்தியமும் தருமமும் நிலைத்துள் ளனவோ, அவனே பாக்கி யவான் : அவனே பிராமணன்." 통 தாமரை இலைமேல் தண்ணிர் போலவும், ஊசி முனைமேல் கடுகு போலவும், இன்பங்களோடு ஒட்டாம லுள்ளவன் எவனோ, அவனையே நான் பிராமணன். என்று சொல்வேன்."