பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜ்யத்தின் கற்பனைகளை மக்களுக்குச் சொல்வதோடு, நீங்களும் ஒவ்வொரு விஷயத்திலும் அவைகளை நிறைவேற்றுங்கள். ஓநாய்களின் நடுவே ஆடுகளை அனுப்புவதைபோல, உங்களை அனுப்புகிறேன். பம்புகளைப் போன்ற புத்திக் கூர்மையுடனும், புறாக்களைப் போன்ற பரிசுத்தத்துடனும் இருங்கள். முதலாவதாக, உங்களுடையவை யென்று வதையும் வைத்துக்கொள்ளாதீர்கள், பை, ரொட்டி, பணம் எதையும் உங்களோடு எடுத்துச் செல்ல வேண்டாம்: உங்கள் தேகங்களில் கட்டி யுள்ள துணிகளோடும், கால்களிலுள்ள செருப்புக்களோடுமே செல்லுங்கள்... ஜனங்கள் நீங்கள் சொல்வதைக் கேட்டு உங்களை வெறுப்பார்கள், உங்களைத் தாக்கி ஊரூராகத் துரத்துவார்கள், ஆனால் கலங்கிவிடாதீர்கள்... ஜனங்கள் உங்கள் உடலைத்தான் கொல்ல முடியும், உங்கள் ஆன்மாவை ஒன்றும் செய்ய முடியாது, ஆதலால் மனிதர்களைக் கண்டு பயப்படாதீர்கள்!" வகவாவது கட்டிய துணிகளோடும் காலிலுள்ள செருப்புக்களோடும் செல்லும்படி சொல்லியிருக்கிறார். புத்தர் தமது பிக்குகளின் சங்கத்தை ஆம்பித்த காலத்தில் பிக்குகள், பிணங்களுக்குப் போர்த்திய துணிகளையும், மக்கள் கழித்து நீத்த கந்தல்களையுமே அணிய வேண்டுமென்று கூறியிருந்தார். பாதரட்சை அணிவதையும் முதலில் அவர் அங்கீகரிக்கவில்லை. பிறர் கொடுக்கும் துணிகளைப் பெற்றுக்கொள்ளலாமென்றும், பாதரட்சை அணியலாமென்றும் பின்னால்தான் அவர் அநுமதித்தார். எசுநாதர் தம் உபதேசங்களெல்லாம் உடனே உலகில் பரவி மக்களெல்லோரும் தேவர்களாகி விடுவார்கள் என்று கற்பனை செய்து கொண்டிருக்கவில்லை. அவ்வுபதேசவிதைகளிற் சில கற்பாறைகளிலும், பண்படாத பாழுந் தரையிலுமே விழுமென்பதை அவர் அறிந்திருந்தார். 'ஆண்டவன் அன்பினாலான ஆலயத்தை விரும்புகிறார்; மக்கள் கற்களைத் தூக்கிக்கொண்டு ஓடுகின்றனர்! என்று மகாகவி தாகுர் கூறினார். இது ஏசுவுக்கும் தெரியும். இத்துடன் மதகுருக்களின் மாய் மாலங்கள், மக்களின் பூசல்கள், போர்களைப் பற்றியும் அவர் அறிந்திருந்தார். மக்களின் இதயங்களில் ஆண்டவனின் அருளாலயம் எப்போது ஏற்படுமென்று கேட்டதற்கு, உடனே ஏற்படாது. வெகு காலத்திற்கு மக்கள் மற்றவர்களை ஏமாற்றுவதற்கு என் உபதேசத்தையே உபயோகிப்பார்கள். இதனால் யுத்தங்களும், குழப்பங்களும் ஏற்படும். நெறிமுறைகள் சிதறி, அன்பு அருகிப் போகும். ஆனால் ஒவ்வொருவரும் உண்மையான உபதேசத்தை (தருமத்தை) உணர்ந்து கொண்டபின், தீமையும் ஆசைத் துாண்டுதல்களும் அகன்றொழியும் என்று அவர் கூறியுள்ளார். ப. ராமஸ்வாமி மு 99