பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்திருக்கின்றனர் என்றும் ரஷ்ய ஞானியான டால்ஸ் டாய் போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர். இவை எவ்வாறேனும் இருக்கட்டும். பிரபஞ்சம் இறைவனின் படைப்பென்றும், இறைவன் தந்தையாயும், தேவகுமாரனாயும், பரிசுத்த ஆவியாயும் மும்மூர்த்தங்களாக இருப்பதாயும், ஒவ்வோர் ஆன்மாவும் உலகுக்கு வருமுன்பு புதிதாய்ப் படைக்கப் பெறுவதாயும், சுவர்க்கமும், நரகமும் எப்போதுமிருப்ப தாயும், ஆன்மாக்களின் நன்மை தீமைகளுக்குத்தக்கபடி அவை இரண்டில் ஒன்றை அடைவதாயும், மக்கள் பிறப்பிலேயே பாவமுடையவர்க ளென்றும், கிறிஸ்துநாதர் மூலம் பாவமன்னிப்பு ஏற்படுகிறதென்றும், கிறிஸ்தவ சமயம் கூறும். இச்சமயத்துள் பின்னால் பல பிரிவுகள் ஏற்படினும், மேலே கூறியவை அவைகளின் பொதுவான கொள்கைகள். முகம்மது நபி உலகில் ஆயிரக்கணக்கான மசூதிகளிலிருந்து அல்லாஹா அக்பர்! (ஆண்டவன் மிகப்பெரியவன்!) என்ற கோஷம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தினம் ஐந்து வேளைத் தொழுகைக்கு அவைகளில் பாங்கு' கூறப்படுகிறது. இருபத்தைந்து கோடிக்கு மேற்பட்ட முஸ்லிம்கள், லா இலாஹா இல்லல்லாஹ் முகம்மதர் ரசூலுல்லாஹ் | (உண்மையான அல்லாவைத் தவிர வேறு ஆண்டவனில்லை முகம்மது அல்லாவின் துதர்!) என்று ஒரேஅல்லாவையும்,அவருடைய ரசூலாகிய நபியையும் ஏற்றுக்கொண்டு பல நாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மார்க்கம் இஸ்லாம் முகம்மது நபி ஆண்டவன் துதராக வந்து கி.பி.ஏழாம் நூற்றாண்டில் அரேபியாவில் இச்சமயத்தை நிறுவினார். இஸ்லாமுக்கு அடிப்படையாக விளங்குபவை குர்ஆன் வேதமும்" முகம்மது வாழ்ந்து காட்டிய முறையாகிய சுன்னத்தும். குர்ஆன் 114 சூராக்கள்(அதிகாரங்கள்) கொண்ட நூல். இது ஆண்டவனால் நபிகள் நாயகத்திற்கு 23 ஆண்டுகளாக அருளப்பெற்றது என்பர். 'உண்மை, பிரகாசம், ஆண்டவன் நூல்-அல்ஹக், அந்நூஈ, கிதாப் புல்லாஹ் என்ற பெயர்களாலும் குர்ஆனைக் குறிப்பிடுவதிலிருந்து அதன் பெருமை நன்கு விளங்கும். kr 7/hey safos down the trust and punished those who did not accept S LSLLa LLL LLSLLLL LLSSS LLCCLL LLLL LLLSH LLLLLLLLS LLSLL LLLLS Burns for not accepting of - Leo Vosstoy

  • பாங்கு - சப்தம், அழைப்பு.

$ இஸ்லாம் - சாந்தி. சமாதானம்,வழிபடுதல். $$ குர்ஆன்- வாசிக்கப்படுவது, வாசிக்க வேண்டியது என்று பொருள்படும். ப. ராமஸ்வாமி o 1 C 1