பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'சாதியால் வந்த சிறுநெறி' என்றும், நீதியால் வந்த நெடுந்தருமநெறி என்றும் குறிப்பிடுகிறார் கம்பர். நீதியின் உறைவிடமாகிய போதிநாதர் நெடுந் தரும நெறியையே திறந்து வைத்து, மக்களை அவ்வழியே அழைத்துச் சென்றார். அவர் அடியார்களும், சாதிப்பித்தும் சமயச் செருக்கும் ஒழிந்து, சமரசமனப்பான்மையை மறவாது போற்றி வந்தனர். ஒரு சமயம் அடிகளின் அணுக்கத் தொண்டரான ஆனந்தர் நெடுவழி செல்கையில், கிணற்றடியில் நீரிறைத்துக்கொண்டிருந்த பெண்ணொருத் தியிடம் தாகத்திற்குத் தண்ணிர் கேட்டார். அவள் தீண்டாச் சாதியைச் சேர்ந்தவளாதலால், அப்பெரியாருக்கு நீரவிக்கத் தயங்கினாள். தண்ணீர்க்கும் நீரிறைக்கும் கயிற்றுக்கும் சாதியுண்டோ என்று ஆனந்தர் கேட்டார். அந்தோ! உலகிலே ஒப்பற்று விளங்கிய ஒரு சமுதாயம், சாதி வகுப்பால் முடை நாற்றத்துடன் அழுகி முடமாக வீழ்ந்திருக்கும் பரிதாபத்தைக் காண வேண்டுமானால் இந்தியாவைப் பார்த்தாலே போதும் இந்த நாட்டிலேதான் புத்தர் பெருமான் இவ்வாறு அறவுரை புகன்றார்: 'ஓ பிக்குகளே கங்கை, யமுனை, அசிரவதி, சரயு. மாஹி முதலிய பெருநதிகள் கடலில் கலக்கும்போது தங்கள் பழைய பெயர்களையும், தோன்றிய இடங்களையும், எவ்வாறு இழந்து ஒரே சமுத்திரம் என்று பெயர் பெறுகின்றனவோ, அவ்வாறே கூடித்திரிய, பிராமண, வைசிய, சூத்திரரென்ற நால்வருணத்தாரும் ததாகதர் உபதேசித்த தருமத்திலும் சீலத்திலும் புகுந்த பின்பு, வீட்டைவிட்டு வீடற்ற வாழ்க்கையை மேற்கொண்டபின்பு, அவர்களுடைய பழைய நாம கோத்திரங்களை இழந்து துறவிகள் என்றே அழைக்கப் பெறுவர்.' மறத்தின் வளர்ப்புப் பண்ணையாக விளங்கிய சாதிக்காட்டைச் சன்மார்க்கத்தால் அழித்து வளஞ் செய்து, அறிவு விதைகள் விதைத்து, அறப்பயிர் வளர்த்து, இன்பக் கதிர்விளைக்க முற்பட்டோரில் முதல்வர் கெளதம புத்தர் என்பதை என்றும் மறக்க முடியாது. பெளத்த தருமம் இந்தியாவில் மிக வேகமாக பரவிய முறை வியக்கத்தக்கதாகும். மழை முகம் கண்ட பயிர்போல், மக்கள் அதை வரவேற்றனர். ஆயிரத்தைந்நூறு பிக்குகளுடன் ததாகதர் நாடு நாடாக நடந்துசென்று அறவுரைகள் கூறியதும், மன்னர்கள் மந்திரிகள் மந்திரிகள், மக்கள் யாவர் உள்ளத்தையும் கவர்ந்து வெற்றி மேல் வெற்றி பெற்றதும் உலக சரித்திரத்திலேயே ஒப்பற்ற பகுதியாகும். நாடெங்கும் பெளத்தம் தழைத்து வளர்ந்தது. காஸ்மீரம், காந்தாரம், ஆப்கானிஸ்தானம், மற்றும் மத்திய ஆசிய நாடுகள் பலவற்றிலும் ததாகதரின் தருமம் ாவியிருந்ததைப் புதைபொருள் ஆராய்ச்சியாளர் இப்போது தெளிவாக எடுத்துாைக்கின்றனர். | | || - ייליי) שייווי யிறு