பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தட்சசீலத்தைப் போலவே பிற்காலத்தில் புகழ்பெற்ற சர்வகலாசாலை ஒன்றுகிழக்கே பீஹார் நாட்டில் நாலந்தாவில் திகழ்ந்து வந்தது. அதில் பதினாயிரம் மாணவர்கள் பயின்று வந்தனர். ஹர்ஷ சக்கரவர்த்தி உள்ளிட்ட பல மன்னர்கள் அதை வளர்த்து வந்ததாகச் சரித்திரம் கூறும். புத்தர்காலத்திலும் அது புகழுடன் விளங்கியதால், அவர் ஆங்குச் சென்று தங்கியிருந்து, சர்வகலாசாலை அறிஞர்களோடு அற ஒழுக்கங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வந்திருக்கிறார். நாலந்தா சர்வ கலாசாலையின் அலங்காரமான ஸ்துபிகளையும், கோபுரங்களையும், வான மண்டல ஆராய்ச்சிக்காக அமைக்கப் பெற்ற விண்முட்டும் ஆராய்ச்சி சாலைகளையும், நீலத்தாமரை மலர்களுடன் விளங்கிய நீர் நிலைகளையும் பற்றிச் சீன யாத்திரிகள் ஹ-யன்ஸ்ாங் வியந்து பாராட்டியிருக்கிறார். இந்தச் சர்வகலாசாலையின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று வருமாறு: 'வெகுளியை மன்னிப்பால் வெல்வாய், திய மனிதனை நற்செயல்களால் வெல்வாய், கருமியை அவனுக்கு அதிகமாய் அள்ளிக்கொடுத்து வெல்வாய், பொய்யனை உண்மையால் வெல்வாய்!' இன்றுள்ள பள்ளிகளும், கலாசாலைகளும், எண்ணுறு வருடங்களுக்கு முன்வரை சிறப்போடு விளங்கிய இந்த நாலந்தா சர்வ கலாசாலையைப் பின்பற்றினால் போதும்-உலகம் உயர்நிலை அடைந்துவிடும்! இந்தியாவும் வெளி நாடுகளும் ஆந்திர நாட்டில் மொழி, கல்வி, கலைகள் யாவும் பெளத்ததாமக்கால் மகோன்னத நிலையை அடைந்து விளங்கின, ஆந்திரக் கலைப்பண்பே பெரும்பாலும் அச்சமயத்தால் உண்டானது என்பர் சரித்திர ஆசிரியர், கலைகளுக்கும் கல்விகளுக்கும் நிலைக்களனாக விளங்கிய நகரங்களில் அமராவதியும், நாகார்ஜுன கொண்டாவும் முதன்மையானவை. குண்டுரிலிருந்து 18 மைல் துரத்திலுள்ள அமராவதியில் சிற்பச் செல்வங்கள் மலிந்த பழைய பெளத்த மகா சேதியம் ஒன்று கண்டுபிடிக்கப் பெற்றிருக்கிறது. இது மெளரிய சக்கரவர்த்திகள் காலத்திலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை நல்ல நிலையிலிருந்ததாகத் தெரிகிறது. அமராவதிக்கு அருகில் நாகார்ஜ"ன கொண்டாவில் சாரியர் நாகார்ஜுனரே நேரில் தங்கியிருந்து தருமப்பிரச்சாரம் செய்துவந்தார். இவர் வேதியராயிருந்து பெளத்த

  • பீஹார்: பெளத்த விஹாரங்கள் (விகாரைகள்) நிறைந்த நாடென்பதால்

இப்பெயருண்டானதாகச் சொல்லப்படுகிறது) 30 புத்த ஞாயிறு