பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நாடுகளின் வழியாயும், கடல் மார்க்கமாயும் பெளத்தத் துறவிகள் சீனாவுக்குச் சென்று அங்கே பெளத்த தருமத்தைப் பிரச்சாரஞ் செய்துவந்தனர். முதன்முதலாகக் கி.பி.67-ம் ஆண்டில் காசியப மதங்கர் என்பார் தர்மரட்சகர் என்ற தோழருடன் சீனாவுக்குச் சென்றதாகத் தெரிகின்றது. பின்னால் வெவ்வேறு காலத்திலும் நூற்றுக்கணக்கான அறிஞர்களும், பிக்குகளும் அங்கே சென்று, வடமொழியிலுள்ள பல பெளத்த நூல்களைச் சீனமொழியில் பெயர்த்தெழுதியதோடு, சீனமொழியிலேயே பல புது நூல்களையும் எழுதியுள்ளார்கள். இத்தகைய பெரியோர்களுள் புத்தபத்திரர், ஜீனபத்திரர், குமாரஜீவர், பரமார்த்தர், ஜீனகுப்தர், போதிதருமர் முதலியோரைப் பற்றிய வரலாறுகள், தருமத்தைப் பிரச்சாரம் செய்வதற்காக அவர்கள் உயிரையும் பொருட்படுத்தாது ஆயிரக்கணக்கான மைல்கள் யாத்திரை செய்து தங்கள் வாழ்நாள் முழுவதையும் அதற்கே செலவிட்ட மாபெருந் தியாகத்தை விளக்குகின்றன. இவர்களில் போதிதருமர் தென்னாட்டில் காஞ்சீபுரத்திலிருந்து கி.பி. ஆறாவது நூற்றாண்டில் சென்றவர். சீனாவிலும், ஜப்பானிலும் இவர்தமது தியாக மார்க்கத்தைப் போதித்து வந்தார். இந்தியாவுக்கு வந்த சீன யாத்திரிகர்களில், கி.பி.ஐந்தாவது நூற்றாண்டில் வந்திருந்த பாஹியான், ஏழாம் நூற்றாண்டில் வந்திருந்த ஹ பயன்சாங், இத்சிங் ஆகிய மூவரும் முக்கியமானவர்கள். இவர்கள் திரும்பிச் செல்லும்போது இந்தியாவிலிருந்து ஏராளமான வடமொழி நூல்களை எடுத்துச் சென்றார்கள். அவைகளில் பல பின்னால் சீனமொழியில் பெயர்க்கப் பெற்றன. இப்போது இந்திய நாட்டில் இல்லாத மூலப்பிரதிகளைச் சீனாவிலுள்ள அவைகளின் மொழிபெயர்ப்பு கவிலேயே பார்க்க வேண்டியிருக்கின்றது. கி.பி.13-ம் நூற்றாண்டில் நேபாளத்திலிருந்து சீனாவுக்குச் சென்றிருந்த அனிகோ என்ற கலைஞர் மங்கோலியச் சக்கரவர்த்தியான குப்லேகானுக்கு ஏராளமான புத்தர் சிலைகளும் பலநிறப் படங்களும் தயாரித்துக் கொடுத்ததாகத் தெரிகிறது. இவரிடம் கலை பயின்ற இ-யுவான் என்ற சீனக்கலைஞன் செய்த பெளத்த விக்கிரகங்கள் ஷாங்காய், பீகிங் போன்ற சீனப்பெரு நகரங்களில் வைக்கப்பெற்றன. கான்டன் நகரத்துப் புத்தர் ஆலயத்தில் புத்த ஜாதகக் கதைகளையே பல வர்ணப்படங்களாகச் சித்தரிப்பதற்காக காஷ்மீரத்திலிருந்து குணவர்மன் என்ற அரச குலத்தைச் சேர்ந்த கலைஞன் சென்றிருந்தான். இவரது தியானமார்க்கம் சீனமொழியில் சான்மதம்' என்றும். ஜப்பானில் ஜென் மதம் என்றும் அழைக்கப்பெறும்.பெளத்த தருமத்தில் இது ஒரு 'llவாகும். புத்த ஞாயிறு