பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'அறிவைவிட வேதத்தைப் பிரமாணமாகக் கூறுவது, உலகைத் தோற்றுவித்தவர் கடவுளென்று ஒப்புக்கொள்வது, தீர்த்த மாடுதலை மதச்சடங்காக்குவது, பிறப்பிலே சாதி வேற்றுமை காண்பது, பாபத்தைப் போக்கச் சரீரத்தை வாட்டுவது இவை ஐந்தும் மனிதர்கள் அறிவற்ற ஜடப் பொருளாகிவிட்டார்கள் என்பதற்கு லட்சனங்கள் என்று பிற்காலத்தில் ஆசிரியர் தருமர்ேத்தி எழுதிய கருத்து அக்காலத்திலும் பல உருவங்களில் ஏற்பட்டிருந்தது. மானிட அறிவையே கருவியாய்க்கொண்டு ஆராய்வோர் சமயங்களின் அடிப்படைகளையே தகர்க்க முன்வருவர். மேலும், முன்னால் ஏற்பட்டு நிலைத்துள்ள சமயங்களைப் பின்னால் தோன்றும் சமயவாதிகள் எதிர்த்துத் தாக்குதலும் உண்டு. ஆன்மீக வாழ்க்கையிலேயே ஈடுபட்டுப் பரம்பொருள் ஐக்கியத்தை நாடும் ஆன்றோர்சமயங்களின் உட்பொருளை மறைக்கும் புறவேடங்களைத் தாக்கி வருதலும் எக்காலத்திலும் வழக்கம். 'பார்ப்பனர்கள் கட்டிய பாழான வேதத்தைச் சோதித்துத் தள்ளடி நீ-குதம்பாய் சோதித்துத் தள்ளடி நீ!' என்றும், 'சாத்திரத்தைச்சுட்டும் சதுர் மறையைப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக்கண்டு சுகம் பெறுவதெக்காலம்' " என்றும் பிற்காலத்தில் தென்னாட்டில் தோன்றிய கருத்துக்கள் முற்காலத்திலேயே கங்கைக் கரையிலும் முழங்கிய கருத்துக்களேயாம். நாத்திகவாதம், அஜீவக மதம், சாங்கியம் முதலிய பலதிறப்பட்ட கக்கால காலாசிரியர்களின் நடுவே எழுந்து நிலைத்த இரு சமயங்கள் பெளத்தமும், சமணமும் பெளத்த மதத்தை நிறுவியர் கெளதம புத்தர். சமண் சமயத்தை நிறுவியர் வர்த்தமான மகாவீரர். புத்தரும் மகாவீரரும் ஒரே காலத்தவரெனினும், மகாவீரர் மூத்தவர். இருவரும் அரச வம்சத்தைச் சேர்ந்தவர். இருவருடைய சமயங்களுக்கும் சில ஒற்றுமைகளிலிருந்தபோதிலும், அடிப்படையான வேற்றுமைகளும் இருந்தன. இச்சமயங்கள் வைதிகச் சூழ்நிலையிலிருந்தே தோன்றியவை யெனினும், இவை வேதங்களையும் வேத முதல்வனையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

  • சமணம் சமண், ஜைன மதம், அருகம். ஆருகதமென்றும் அழைக்கப்

பெறும்.

    • மகாவீரர் விருஷட தேவரென்றும். நிகந்தநாத புத்தரென்றும் அழைக்கப்

பெறுவர். இவருக்கு வேறுபல பெயர்களுமுண்டு. $ குதம்பைச் சித்தர் $$, பத்திரகிரியார் 58 ம புத்த ஞாயிறு