பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரு மார்கள் அவர்மீது குற்றஞ்சாட்டி விசாரித்தனர். அவர்களின் தலைவராயிருந்த கயாபஸ், முடிவில் தண்டனை விதிப்பதற்காக, ரோமாபுரியின் பிரதிநிதியான பாண்டியஸ் பைலேட்டிடம் அவரை அனுப்பி வைத்தார். பைலேட் ஒரு பாவமும் அறியாத ஏசுவைத் தண்டிக்க விரும்பவில்லை. ஆனால் குரு மார்கள் விடவில்லை. ஏசு சக்கரவர்த்திக்குப் போட்டியாக வந்த 'இராஜத்துரோகி யென்று வாதாடினர். யோமா புரி ஆட்சி முறையில் வழக்கத்திலிருந்த சிலுவையில் அறைந்து கொல்லும் தண்டனையை ஏசுவுக்கும் அளிக்கப்பட வேண்டுமென்று வேண்டினர். முடிவில் பைலேட்டும் இணங்கினார். ஏசு சிலுவையிலேற்றப்பட்டார். கைகளிலும் கால்களிலும் ஆணிகள் அறையப்பட்டன உத்தமரின் உதிரம் வடிந்தது. செந்தாமரை போன்ற அவர் திருவதனம் வடித் தொங்கி விட்டது. பைலேட் தமது ஆட்சிக்காலம் முடிந்து ரோமாபுரிக்குச் சென்றபின்பு தம்மால் தண்டனை விதிக்கப் பெற்ற ஏசுவைப் பற்றி என்ன எண்ணியிருப்பாம்? இந்தக் கேள்வியை ஆதாரமாக வைத்துக்கொண்டு புகழ்பெற்ற ஆசிரியர் ஒருவர் ஒர் அழகிய கதை எழுதியுள்ளார். ைலேட் டி ன் நண்பர் ஒருவர் அவரிடம் பேசுகையில், முன்பு எருசலேமில் 'ஏக என்ற ஒருவரைச் சிலுவையிலறைந்தது அவருக்கு ( , ப. மிருக்கிறதா என்று வினவினார். பைலேட், எத்தனையோ பேர்கருக்கு அத்தகைய தண்டனைகள் விதித்திக்கிறேன். ஏசுவா?... ஏசு... அந்தப் பெயரே ஞாபகத்தில்லையே! என்று மறுமொழி கூறியதாக அக்கதையில் காணப்படுகிறது. பைலேட்டே ஏசுவை மறந்துவிட்டார்! ஆனால், ஒரு பைலேட்டால் மறக்கப்பெற்ற ஏசு கிறிஸ்துவை உலகில் இன்று அறுபது கோடி கிறிஸ்தவர்கள் தெய்வமாகப் போற்றி வருவதுடன் அவருடைய சிலுவையையும் பேற்றி வருகின்றனர்! த்ெதியங்களிலும், சிலைகளிலும் காணப் பெறும் கிறிஸ்து துய ைகளனிந்து, நவநாகரிகக் கனவானைப் போல விளங்கிய போதிலும், உண்மையான ஏசுநாதர் ஆண்டிகளோடு ஆண்டியாக வாழ்ந்திருந்த தாகவே சரித்திரம் கூறும். புத்தர் கந்தல்களை யணிந்த, மயானத்துப் பினங்களிடையே வாழ்ந்ததாகவும், தனியேயிருந்து மெளனமாகச் ந்ெதித்துத் தியானத்திலிருக்கும் வழக்கம் அவருக்கு இருபத்தொன்பது வயது முதல் எண்பது வயது வரை இருந்ததாகவும் தெரிகிறது. இதுபோலவே ஏகநாதரும் சாதாரண உடையுடன் எளிய வாழ்க்கையே கொண்டிருந்தார்; ஏகாந்தமாகத் தியானம் செய்தலும், இறைவனைத் தொழுதலும் அவரது இயற்கைப் பண்புகளாயிருந்தன. வாழ்க்கையில் முக்கியமான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அவர் ஆண்டவனை நேரில் அழைத்துப் பேசுதல்போல, அவனிடம் முறையிட்டு, உள்ளத் தெளிவும், உறுதியும் பெற்றிருக்கிறார். சிலுவையிலே தொங்கிய போதும், என் 96 ைபுத்த ஞாயிறு