பக்கம்:புத்த ஞாயிறு.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி - 115,

என்பதுபோல் அத்தனை அழகாகப் பக்தி செய்து வாழ் கிருய் நீ! தன்னை மறந்து வாழும் உனக்கு, உன் தியாகத் தைப் பற்றி நானே நினைவூட்டக் கூடாது. குருடகிைய என்னைப் பக்தி செய்ய அதிகமான பொறுமைவேண்டும். கணவனே, விலைமகள் வீட்டுக்குச் சுமந்து கொண்டு போன நளாயினி முதல் உன் வரை, இந்த தேசத்துப் பெண்கள் ஏதோ ஒரு பெருந்தன்மையைத்துன்பங். களின் நடுவே தங்களையே மறந்து விடுகிற பெருந் தன்மையைப் பக்கபலமாக வைத்துக் கொண்டிருக் கிரு.ர்கள். அந்தப் பெருந்தன்மையை நான் மானசீக மாக வணங்குகிறேன் அம்மா! சில நேரங்களில் உன்னே என் மனைவியாக நினைத்துப் பார்க்கவும் எனக்கு மனம் கூசுகிறது. தாயைப் போல அன்பு செய்கிருய்: குழந்தையைப் போல் பேதையாக இருக்கிருய்! மனைவியைவிடப் பிரியமாக நடந்து கொள்கிருய்!" அதல்ை உன்னே எந்த உறவில் அடக்குவதென்று. எனக்கே தயக்கமாக இருக்கிறது. உயர்ந்த வகை மல்லிகை மலர்கள் உன் கூந்தலில் மணக்கவும், வளைகள் உன் கைகளில் நிறைந்து குலுங்கவும், நயமிக்க இசை நாடிகள் உன் இராகங்களில் துடிக்கவும் வேண்டும். நீ மகாலெட்சுமியர் ய் என்னைச் சூழ்ந்திருக்கிற வரையில் தான் நான் குருடன் என்பதை இந்த உலகில் என்னல் மறந்திருக்க முடியும் அம்மா. - . சுகுளு: உங்களுடைய இந்தப் புகழையும், நல்ல அபிப் பிராயத்தையும் கடைசிவரை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே, என்று பொறுப்பாகவும், அச்சமாகவும்கூட இருக்கிறது, தெய்வமே அவநம்பிக்கையும் ஆத்திரமும் என் தெய்வத்துக்கு ஏற்படுவதே இல்லை. ஏதோசெல்லக் குழந்தையை வளர்த்துப் பெருமைப்படுகிற மாதிரி என்னிடம் பிரியம் வைத்திருக்கிறீர்கள். இதைக் கடைசி வரை காப்பாற்றிக்கொள்ளக் கூடிய அன்பின் வலிமை எனக்கு வேண்டும் தெய்வமே