பக்கம்:புத்த ஞாயிறு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盖粉 புத்த ஞாயிறு

பிட்சு: எப்படி? எதைச்சொல்லி, என்ன சான்று காண் பித்து என்னை எளிதில் மாற்றிவிட முடியுமென்று நினைக் கிருய் நீ? இளைஞன். எதைக் காண்பித்து மாற்றுகிறேன் என்று பார்க்கத் தயவு செய்து என்ைேடு வாருங்களேன். இந்த நகரத்தில் பசிப்பிணியாலும், வறுமை வாட்டங் களாலும், நோய் நொடிகளாலும், நொந்துகிடக்கிற வர்களைக் காணவேண்டுமானல் உலக அறவியின்’ பொது அம்பலத்திற்கு என்ளுேடு நீங்கள் வரவேண்டும். அப்படி வந்தால் அப்போது தெரியும் உங்கள் புத்த ஞாயிற்றின் நிலைமை! பிட்சு: உலக அறவியின் பொது அம்பலத்திற்கு நீ என்னை அழைத்துப் போவதாயிருந்தால் நான் தாராளமாக வருகிறேன். எனக்கு, அதில் ஆட்சேபணை ஏதும் இல்லை. இப்போதே அழைத்துச் செல். நான் ஆயத்த மாயிருக்கிறேன். இளைஞன் ஆட்சேபணையில்லையானல் தாராளமாக வாருங் 'கள். போகலாம். என்ைேடு புறப்படுங்கள். (இருவரும் போகின்றனர்) பிட்சு. ஓ...இதோ இப்போதே வருகிறேன்...புறப்படு.

(குதிரைக் குளம்பொலி-தேர்கள் செல்வது போன்ற பரபரப்பான சூழ்நிலை)

(திரை) காட்சி-3 இடம்:-உலக அறவி உலக அறவி: நோயாளிகள் பசிப்பிணியாளர்களின் கட்டம் (நோயாளிகளின் ஈனக்குரல்கள் அங்க ஈனர் களின் கதறல்-முக்கலும் முனகலும்-ஐயோ, அப்பா போன்ற சோக ஒலிகள்) இளைஞன்: அடிகளே! இதோ உலக் அறவி வந்துவிட்டது! இவர்களைப் போன்றவர்களின் துன்பங்களிலிருந்துதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/18&oldid=597381" இலிருந்து மீள்விக்கப்பட்டது