பக்கம்:புத்த ஞாயிறு.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி 2蕊

கணிகை: ஏன் வேருென்றுமில்லை? வேறு எல்லாமே இருக்.

கிறது. தயை கூர்ந்து என் இல்லத்திற்கு எழுந்தருளுங் கள், என் இசையைக் கேளுங்கள். என் நடனத்தைக் காணுங்கள். இந்த வீதியிலேயே என் குரலுக்கு. ஈடில்லை...இதோ... (பாடுகிருள்) இசைப்பாட்டு (2)

'வாரீர்! என் அழகைப்பாரீர்வடிவழகைப் பாரீர் ஊரூராய் அலைந்தாலும் காணிர்

உயிருருவம் என்போலே முத்துக்களை வைத்து த் தெரி பல்லோடே

முருக்கிதழ் சுரிகுழல் சித்தத் தலம் ஒத்துத்தெரி சொல்லாடல் கத்துங்கடல் அலைநீலக்

கரையிட்டொளிர் கலையாடத் தத்திங்கின தித்தோ மென நடமாடும்

கலப்பட்டொளிர் விழிமானே-நானே. (மீண்டும்) வாரீர் என் அழகைப் பாரீர்

வடிவழகைப் பாரீர் ஊரூராய் அலைந்தாலும் காணிர்

உயிருருவம் என் போலே.

பிட்சு : உன் குரல் இனிமையாயிருக்கிறது பெண்னே!" உன் உடலும் வனப்பு நிறைந்ததாயிருக்கிறது. ஆனல் இவற்றில் எல்லாம் நான் யாருடைய திறமையைக்

காண்கிறேன் தெரியுமா? பகவான் புத்தருடைய திறமையையே காண்கிறேன். உனக்கு இத்தகைய குரலைக் கொடுத்த புத்தர் பெருமானைப் போற்று கிறேன். உனக்கு உடலழகைக் கொடுத்த புத்தர் பெரு. மானின் திறமையை வியக்கிறேன். அழகும் குரலும், இறைவனுடையவை. அவற்றை உரிமைகோரி நீ பேசும் வெறும் ஆணவமே உன்னுடையது. -.'