பக்கம்:புத்த ஞாயிறு.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


38 - புத்த ஞாயிறு

களும், பருத்த உடலுமாக ஒர் இளைஞன்-உங்களைச் சந்தித்துக் கேள்விகள் கேட்டது நினைவிருக்கிறதா? (பழையவற்றைகினை கூறுவதற்கு ஒத்த வகையில்பின்னணி)

பிட்சு: ஆம்! இப்போது நன்ருக ஞாபகம் வருகிறது.

புத்த ஞாயிறு தோன்றும் காலத்தில் உலகத்துக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்று கேள்வி கேட்டாய். பசியும், பிணியும் தீர்ந்து நாடெங்கும் வசியும் வளமும் சுரக்கும் என்று நான் மறுமொழி கூறினேன். உடனே நீ கோபத்தோடு என்னை உலக அறவியின் பொது அம்பலத்திற்கு அழைத்துச் சென்ருய். அங்கே கூனும் குருடும், முடமும் நொண்டியுமாக அடைபட்டுக் கிடப் பவர்களை எனக்குக் காண்பித்து, ! உங்கள் புத்த ஞாயிறு ஏன் இவர்களுடைய வாழ்வில் எல்லாம் வசியும் வளமும், சுரக்கச் செய்யவில்லை?” என்று கடுங்கோபத் தோடு கேட்டாய்! -

வாலிப: நான் அப்படிக் கேட்ட உடனே நீங்கள் என் ைேடு விவாதத்தைத் தொடங்கினர்கள். நானும் பதிலுக்கு உங்களோடு விவாதித்தேன். விவாதம் செய்வது சரி! ஆனால் என்ைேடு விவாதம் செய்வதற் கான முறையில் நீ என்னென்ன நூல்களைக் கற்றிருக் கிருய்?’ என்று கேட்டீர்கள். அந்தக் கேள்வியை என்னை நோக்கி நீங்கள் கேட்டபோது சுற்றி இருந்தவர்கள் ஏளனமாகச் சிரித்தார்கள்.

(பின்னணியில் அதே சிரிப்பொலி) பிட்சு: ஆம் நினைவிருக்கிறது! நினைவிருக்கிறது!

வாலிப: அன்று மற்றவர்கள் என்னை நோக்கிச் சிரித்த சிரிப் பொலிதான் படிப்படியாக என்னை இன்று இவ்வாறு பிட்சுவாக மாற்றியது. நான் இப்படி மாறியதற்கு உங்களை அறிந்தோ அறியாமலோ, நீங்கள்தான் கார னம் அடிகள்ே!