பக்கம்:புத்த ஞாயிறு.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


32 புத்த ஞாயிறு

பிட்சு : ஆளுல் அன்று நான் கூறியதை உணர உன் மனம் மறுத்தது. ஆணவம் உன் கண்களை மறைத்தது. ஏதேதோ பேசிய்ை நீ...

கணிகை : பேசிய பாவத்தைத் தான் இப்போது அநுபவிக்

கிறேனே...? இது போதாதா?

பிட்சு : மனித சமூகம் எத்தனை நயவஞ்சகமானது என்று இப்போது புரிகிறதா? உன்னிடம் அழகு இருந்தவரை உன்னை-மணமுள்ள தேனுள்ள மலரை நாடும் வண்டு களைப் போல்-சுற்றிப் பறந்தார்கள். இன்ருே நாடுவா ரில்லை. உன்மேல் எப்போது கருணை செலுத்த வேண்டும் எப்போது கடைக்கண் பார்க்க வேண்டுமென்பது எனக்குத் தெரியும்' என்று அன்றே நான் கூறினேன். அதனுல்தான் உரிய காலத்தில் இன்று இப்போது என் உதவியைச் செய்வதற்காகத் தேடி வந்திருக்கிறேன்.

கணிகை ! நன்றி மறந்த எனக்கு உங்களைப் போன்ற மகான் ஒருவரின் உதவியை அடையும் தகுதி இருக் கிறதா? இனியும் அதற்கு நான் பாத்திரமாக முடியுமா?

பிட்சு : எப்போது உன்னைத் தேடி வரவேண்டுமோ அப்போது உன்னைத் தேடித் தானகவே என் கால்கள் வரும் என்று அன்று நான் கூறியிருந்தது நினைவிருக் கிறதா பெண்னே? -

கணிகை : நினைவிருக்கிறது! (அழுகை கலந்த குரலில்) "விரும்புகிற போது செய்யாத உதவியை-எப்போதா வது செய்வதில் என்ன பயன் இருக்க முடியும்’-என்று நான்தான் அன்று உங்களிடம் வீணுக வம்புபேசினேன். விரும்புகிறபோது உதவி செய்வதைவிடத் தேவைப்படு கிறபோது உதவி செய்வதுதான் நல்லதென்று நான் கருதுகிறேன்’ என நீங்கள் சாந்தமாகப் புன்முறுவல் பூத்த முகத்தோடு அன்று எனக்கு மறுமொழி கூறினர் கள். உங்களுடைய அந்தப் புன்முறுவலின் காந்திதான் என் உடம்பை இன்று இப்படி ஒரேயடியாய் எரித்து விட்டது.