பக்கம்:புத்த ஞாயிறு.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி 5F

(Լք 3:

மகன்: (மெல்ல அவள் காதருகே வந்து) போ மகளே: போ, அப்படியே நிற்காதே... பாளையத்தார்களை வணங்கிப் பரிசுகேள். போ... யாரோ ஊர்பேர் தெரி யாதவன் தந்த ஒலையில் நேரத்தை வீணடிக்காதே!.

(இளைஞனின் கவிதைப் பரிசை விடவும் சிற்றரசர்கள் தரப்போகும் பரிசுகள் எப்படி மதிப்புள்ளவையாக இருக்க முடியும் என்கின்ற அலட்சியத்தோடு, முதிய வர் சொன்னரே என்பதற்காகவும் கூட்டத்தை மதிப்ப தற்காகவும் போய்ச் சிற்றரசர்களை வணங்கி அவர்கள் அளிக்கும் சம்ாமனங்களைப் பெற்றுக்கொண்டு, அப் படியே தந்தையின் மேலாடையில் கொண்டுபோய்க்

கொட்டுகிருள். ஒலை நறுக்கை மட்டும் தனியே எடுத்துத்

(LP3í!

கோ

தன் மின்னிடையில் பயபக்தியோடு சொருகிக்கொள் கிருள்) மகன்: கோதை! யாரம்மா அந்தக் கிறுக்கன்? உன்னு. டைய கழைக்கூத்தின் அற்புதங்களைக் கண்டு எட்டுப் பாளையத்துத் தலைக்கட்டுக்களும் மெய்ம்மறந்து கிறங் கிப்போய் வீற்றிருக்கும்போது, பித்தனப்போல் எழுந்து ஓடிவந்து ஒலை நறுக்கை வீசி எறிந்துவிட்டு ஒடுகிருனே? ஆள் உன்னிடம் ஒலையைக் கொடுத்து விட்டுப் பறந்துபோய்விட்டான். என் கையில் அகப்பட். டிருந்தால் நாலு பூசைக்காப்புச் சாத்தியிருப்பேன்... தை: (விழிகளில் சீற்றம் சுழல) அப்பா! உங்கள் வார்த்தைகளை நான் அப்படியே ஏற்றுக்கொள்வதற். கில்லே! இரசித்த பின் பதிலுக்கு என்ன கொடுக்கப் போகிரு.ர்கள் என்பதை வைத்து இரசிகத்தன்மையை மதிப்பிடப் பழகிக்கொள்ளக் கூடாது. ஒன்றும் பதி லுக்குக் கொடுக்கமுடியாமல் மனப்பூர்வமாக இரசிப் பவர்கள் ஆயிரம்பேர் இருக்கலாம். மனப்பூர்வமான அனுபவமே பெரிய கொடைதான். இலட்சம் பொற். காசுகளை விட ஒரு க்வியின் இதயபூர்வமான வாக்கினல் புகழப்படுவது மிகப்பெரும் பாக்கியம் அல்லவா?